பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 5, 2022

பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிக் கல்வி ஆணையர் உத்தரவு!


2021-2022 ஆம் கல்வியாண்டில் 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான மாணவர்களுக்கு அரசு பொது தேர்வு கடந்த மே 2022 மாதத்தில் நடைபெற்றது . மேற்கண்ட 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு 25.07.2022 முதல் 08.08.2022 முடிய துணைத்தேர்வுகள் நடைபெற உள்ளது.


இத்துணைத்தேர்வில் தேர்ச்சி அடையும் பொருட்டு சார்ந்த பாட ஆசிரியர்கள் தேர்வு முடியும் வரை தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு பயின்ற பள்ளியில் மாலை நேர சிறப்பு வகுப்புகள் நடத்தி தேர்வில் பங்கு பெறுவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திடுமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

1 comment:

  1. ஏன் டா உங்களுக்கு வேற வேலை இல்லையா ...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி