TET ஆன்லைன் தேர்வுக்கு TRB இணையதளத்தில் பயிற்சி - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 6, 2022

TET ஆன்லைன் தேர்வுக்கு TRB இணையதளத்தில் பயிற்சி - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

 

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2022 ம் ஆண்டிற்கான ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிக்கை எண் .01 / 2022 , நாள் 07.03.2022 அன்று வெளியிடப்பட்டது . இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 14.03.2022 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டது.

 மேலும் , விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 26.04.2022 வரை கால் அவகாசம் வழங்கப்பட்டது. அதில் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்பொழுது ஆகஸ்டு மாதம் 25 முதல் 31 வரை உள்ள தேதிகளில் தாள்- 1 ற்கு மட்டும் முதற்கட்டமாக தேர்வுகள் கணினி வழியில் மட்டுமே நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

 மேற்படி கணினி வழித் தேர்விற்காக ( Computer Based Examination ) பயிற்சித் தேர்வு ( Practice Test ) மேற்கொள்ள விரும்பும் தேர்வர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பயிற்சியினை மேற்கொள்வதற்கு , தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்பிருந்து வாய்ப்பு வழங்கப்படும். அனைத்து பணிநாடுநர்களும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பயிற்சி மேற்கொள்ளலாம் . இது குறித்த அறிவிக்கை , தேர்வு கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு ( Admit card ) வழங்கும் விவரம் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் அறிவிக்கப்படும்.

3 comments:

  1. ஆன்லைன் தேர்வு எப்படி சரியான முறையாக இருக்க முடியும். ஒவ்வொரு பிரிவுகளிலும் தனித்தனி கேள்விகள் கேட்கப்படும் போது, ஒரு பிரிவில் எளிமையாகவும் மற்றொரு பிரிவில் மிகக்கடினமாகவும் வினாத்தாள் அமைய வாய்ப்புள்ளது. ஆன்லைன் தேர்வு என்பது எவ்விதமான அரசு தைர்வுகளுக்கும் நம்பகத்தன்மை இல்லாததாகவே உள்ளது.

    ReplyDelete
  2. எந்த தேர்வு எழுதி எந்த வேலை போடப் போறாங்க. 9 வருடமும் கடந்து விட்டது தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று. இப்போது 1800+ மட்டுமே பணியிடங்கள். அனைத்து பணிகளையும் பதவி உயர்வு பெறும் இடைநிலை ஆசிரியர் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இளநிலை உதவியாளர் போன்ற வேலையில் இருப்பவர்களுக்கு ஒதுக்கி தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று பல வருடங்களாக தெருவில் திரிபவர்களுக்கு 1800 அதுவும் மறு படி தேர்வு. இப்போதும் தகுதி இருந்தும் குடும்ப சூழ்நிலை மோசமாக உள்ளவர்கள் திருமணம் ஆகாமல் இருப்பவர்களோடு போட்டிபோட முடியுமா?

    ReplyDelete
  3. MPC TRB coaching center Erode
    UG TRB (MATHS) Recruitment exam
    # Regular class starts from July 28
    # Online class + live recorded videos for further reference
    # Slip tests + Unit wise tests
    # 20%, 30% and 50% tests
    # For details 9042071667

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி