மாநில கல்விக் கொள்கை கருத்து கேட்பு தேதி நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2022

மாநில கல்விக் கொள்கை கருத்து கேட்பு தேதி நீட்டிப்பு

 

தமிழ்நாட்டில் தனித்துவமான ( Distinct ) மாநில கல்விக்கொள்கை வகுக்கும் நோக்கில் அரசு நடவடிக்கை மேற்கொண்டு , அரசாணை ( நிலை ) எண் . 98 பள்ளிக்கல்வித் ( வரவு செலவு -2 ) துறை , நாள் . 01.06.2022 ன் படி மாண்புமிகு நீதியரசர் ( ஓய்வு ) திரு.த.முருகேசன் , முன்னாள் புதுதில்லி உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் அவர்கள் தலைமையில் ஓர் உயர்மட்டக்குழு அமைத்து ஆணையிட்டுள்ளது.


மாநிலக் கல்விக் கொள்கை சம்மந்தமாக பொதுமக்கள் | கல்வியாளர்கள் / தன்னார்வலர்கள் | தொண்டு நிறுவனங்கள் / ஆசிரியர்கள் | ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் 1 மாணவர்கள் பெற்றோர்கள் 1 தனியார் கல்வி நிறுவனத்தைச்சார்ந்தவர்கள் ஆகியோரிடமிருந்து கருத்துருக்கள் மற்றும் ஆலோ கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் அல்லது அலுவலக முகவரிக்கு 15.09.2022 ஆம் தேதி வரை அனுப்பிவைக்கலாம் என 14.07.2022 அன்று செய்தி மக்கள் தொடர்புத் துறை மூலம் பத்திரிக்கை செய்தி வெளியிடப்பட்டது.


 மாநிலக் கல்விக் கொள்கைக்குழு மேலும் கூடுதலாக ஒரு மாத காலம் நீட்டித்து 15.10.2022 ஆம் தேதி வரை கருத்துருக்கள் மற்றும் ஆலோசனைகளைப் பெற முடிவு செய்து அவ்வாறே கால நீட்டிப்பு வழங்கப்படுகிறது.




No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி