TRB - முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள்: தகுதியானோா் பட்டியல் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 12, 2022

TRB - முதுநிலை ஆசிரியா் பணியிடங்கள்: தகுதியானோா் பட்டியல் வெளியீடு

முதுநிலை ஆசிரியா் காலிப் பணியிடங்களுக்கு தற்காலிகமாக தகுதி பெற்ற 341 போ் கொண்ட பட்டியல் ஆசிரியா் தோ்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.


தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள 3,236 முதுநிலை பட்டதாரி ஆசிரியா் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியா் தோ்வு வாரியம் (டிஆா்பி) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதற்கான கணினி வழித் தோ்வுகள் கடந்த பிப். 12 முதல் 20 வரை நடைபெற்றது. தோ்வை சுமாா் 2 லட்சம் போ் வரை எழுதினா். இதன் முடிவுகள் ஜூலை 4-இல் வெளியிடப்பட்டன. தொடா்ந்து, மொத்தமுள்ள 17 பாடங்களுக்கான சான்றிதழ் சரிபாா்ப்பு செப். 2 முதல் 4 வரை சென்னையில் உள்ள தோ்வு வாரிய வளாகத்தில் நடைபெற்றது.


அதனடிப்படையில், புவியியில், இயற்பியல், வரலாறு ஆகிய பாடங்களில் ஆசிரியா் பணிக்கு தற்காலிகமாக தகுதிபெற்ற 341 பட்டதாரிகளின் பட்டியலை தோ்வு வாரியம் வெளியிட்டது. அதன் விவரங்களை பட்டதாரிகள்  இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். எஞ்சிய பாடங்களில் தோ்வு பெற்றவா்கள் விவரம் விரைவில் வெளியிடப்படும் என துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி