பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை(ஜன. 4) முதல் ஹால் டிக்கெட்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 3, 2023

பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை(ஜன. 4) முதல் ஹால் டிக்கெட்!

 

பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை (ஜன. 4) பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


2023 ஆம் ஆண்டுக்கான பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 13-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஆண்டு 8 லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள்.


அதன்படி, பிளஸ் 2 மாணவர்களுக்கு அடுத்த மாதம் செய்முறைத் தேர்வு தொடங்குவதால் ஹால் டிக்கெட் நாளை(ஜன. 4) இணையத்தில் வெளியிடப்பட உள்ளது. 


பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் நாளை (ஜன. 4) பிற்பகல் 2 மணி முதல் தேர்வுத்துறை இணையதளத்தில்( https://dge1.tn.gov.in/ ) இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தேர்வுத்துறை இயக்ககம் தெரிவித்துள்ளது. 


பள்ளிகள், மாணவர்களின் ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்த பின்னர் மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 


பிளஸ் 1 மாணவர்களுக்கு வரும் மார்ச் 14 முதல் ஏப்ரல் 5 வரையிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரையிலும் பொதுத்தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி