தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால், மாணவர்களின் நலன் கருதி முன்கூட்டியே தேர்வுகளை நடத்தி கோடை விடுமுறை அளிக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
11, 12-ஆம் வகுப்புகளுக்கான தேர்வுகள் அடுத்த சில நாட்களில் நிறைவடைகின்றன. பத்தாம் வகுப்புக்கு வரும் 6-ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்குகிறது. உயர்வகுப்புகளுக்கான பாடங்கள் நடத்தி முடிக்கப்பட்டு தேர்வு தொடங்கிய நிலையில் தொடக்கநிலை வகுப்புகளுக்கு தேர்வு தொடங்குவதில் தாமதம் ஏன்? ஏப்ரல் இறுதி வரை வகுப்புகள் நடத்தப்பட வேண்டும் என்று எந்த கட்டாயமும் இல்லை. குழந்தைகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உடனடியாக தேர்வுகளை நடத்தி, ஏப்ரல் இரண்டாம் வாரத்திலிருந்து கோடை விடுமுறை அளிக்க பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Super.government ஐ கேள்வி கேட்கும் ஒரே கட்சி
ReplyDeleteபள்ளிக்கூடம் ஆசிரியருக்கு தான் வைக்கிறோம்.. மாணவர்களுக்கு விடுமுறை விட்டு விட்டால் ஆசிரியருக்கு என்ன வேலை கொடுப்பது.. எங்கள் நோக்கம் ஆசிரியரை பழி வாங்க வேண்டும்.. மாணவர்களை பற்றி எங்களுக்கு கவலை இல்லை
ReplyDelete