ஜனவரி 2 பள்ளி திறக்கும் நாளில் ஒரு ஆசிரியர் CL கட்டாயம் கேட்கிறார் வழங்கலாமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 31, 2023

ஜனவரி 2 பள்ளி திறக்கும் நாளில் ஒரு ஆசிரியர் CL கட்டாயம் கேட்கிறார் வழங்கலாமா?

வழக்கமாக ஒவ்வொரு விடுமுறை காலங்களில் ஏற்படும் சந்தேகம் தான் 


ஜனவரி 2 பள்ளி திறக்கும் நாளில் ஒரு ஆசிரியர் CL கட்டாயம் கேட்கிறார் வழங்கலாமா?


இந்த முறை 2/1/24 அன்று CL வழங்க இயலாது.....


ஏன்? அவர் last working day 22/12/23 வந்து விட்டார்...


Either last working day or first working day வந்தால் போதும் என நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம் 


CL vacation/ non vacation அனைத்து பணியாளர்களுக்கும் பொதுவானது ...


CL ( விடுப்பு+விடுமுறை ) 10 நாள்கள் வரை allowed..... 

11 வது நாள் பணியில் இருக்க வேண்டும் 


( எதிர்பாராத விதமாக 11 வது நாள் இயற்கை பேரிடர், தலைவர்கள் மரணம் என அரசு திடீரென விடுமுறை அறிவித்தார்கள் எனில் பிரச்சினை இல்லை, அனுமதி உண்டு)...


இந்த முறை 23 /12/23 முதல் 1/1/24 வரை 10 நாள்கள் விடுமுறை....


2/1/24 CL எனில் 10 விடுமுறை நாள்கள் + 1  விடுப்பு  நாள் , என 11 நாள்கள் ஆகிறது....


(22/12/23 கடைசியாக பணிக்கு வந்த நாள் , அதற்கு பிறகு 3/1/24 எனில் *11 நாள்கள்* ) எனவே இது *CL* விதிகளின் படி எடுக்க *இயலாது* ....


எனவே தான் இந்த ஆண்டு 2/1/24 பள்ளி திறக்கும் நாளில் போது ( *12 CL* கைவசம் இருந்த போதிலும் 😃) CL அனுமதிக்க *இயலாது* ..


ஒருவேளை 22/12/23 கடைசி வேலை நாள் போது பிற்பகலில் CL அல்லது நாள் முழுவதும் CL அனுமதித்து இருந்தாலும் அதுவும் தவறு தான்...


சரி....

 2/1/24 அன்று கட்டாயம் ஒரு ஆசிரியருக்கு *விடுப்பு* தேவை... என்ன செய்யலாம்?


CL தான் வழங்க இயலாது....


 EL எடுக்கலாம்


அரசு விடுமுறை முன் இணைப்பு அனுமதி உண்டு ...


2/1/24 ஒரு நாள் EL எனில்...

முன்னர் உள்ள விடுமுறை காலம் முன் அனுமதி ...

( ஒரு நாள் மட்டுமே EL) 


(22/12/23 பணிக்கு வந்து இருக்க வேண்டும்) 


22/12/23 அன்றும் வரவில்லை

2/1/24 அன்றும் வரவில்லை என்றால்

 *12 நாள்கள் EL* ஆக மாறிவிடும்...


இந்த பதிவின் நோக்கம்...


1) கோடை விடுமுறை எப்போதும் 10 நாள்களுக்கு மேல் என்பதால்

 ஏப்ரல் கடைசி வேலை நாள்...


அதே போல்

 ஜூன் பள்ளி திறக்கும் முதல் நாள் அன்று 

எப்போதும் CL எடுக்க இயலாது


2) காலாண்டு / அரையாண்டு விடுமுறை பொறுத்தவரை ஆண்டிற்கு ஆண்டு 

 மாறுபடும் ....


அந்த ஆண்டில் 10    நாள்களுக்குள் எனில் CL எடுக்கலாம் ...


 விடுப்பு+விடுமுறை 10 நாள்களுக்கு மேல் என்றால் எடுக்க இயலாது

1 comment:

  1. டேய் அப்பா தயவு செஞ்சு காலாண்டு, அரையாண்டு , முழு ஆண்டு விடுமுறை அனைத்தும் ரத்து செய்து விட்டு மற்ற அரசு ஊழியர்களை போல 30 நாள் EL கொடுத்துடுங்கடா.. புண்ணியமா போகும்.. இந்த தடவை அரசு விடுமுறை போக காலாண்டுக்கு ஒரு நாள் விடுமுறை, அறையாண்டுகு 4 நாள் விடுமுறை. மே மாதம் சனி ஞாயிறு நீங்கலாக 20 நாள் அதுல Admission, Result, TC issue என பத்து நாளை தின்னரானுங்க.. அப்புறம் வாத்தியாருக்கு மட்டும் இந்தனை நாள் விடுமுறை என வன்மத்தை கக்குவானுங்க ..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி