பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய தேர்வு அட்டவணை: அண்ணா பல்கலை. வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 8, 2023

பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய தேர்வு அட்டவணை: அண்ணா பல்கலை. வெளியீடு

 

பொறியியல் கல்லூரிகளுக்கான திருத்தப்பட்ட பருவத் தேர்வுக் கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழகம் தற்போது வெளியிட்டுள்ளது.


இதுதொடர்பாக அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:


அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான நவம்பர் / டிசம்பர் மாத பருவத் தேர்வுகள் டிசம்பர் 4-ம் தேதி முதல் அடுத்தாண்டு பிப்ரவரி 24-ம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான தேர்வுக்கால அட்டவணையும் வெளியிடப்பட்டது.


இதற்கிடையே மிக்ஜாம் புயலின் பாதிப்பையொட்டி கல்லூரிகளுக்கு தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி கடந்த வாரம் தொடர் விடுமுறை வழங்கப்பட்டது. இதையடுத்து தேர்வுக் கால அட்டவணையில் தற்போது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.


டிச.11 - பிப்.17 வரை: அதன்படி இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான பருவத் தேர்வுகள் வரும் டிச.11-ம் தேதி தொடங்கி பிப்.17-ம் தேதி வரை தொடர்ந்து நடைபெறும். இதற்கான புதிய தேர்வுக்கால அட்டவணை பல்கலைக்கழக இணையதளத்தில் (https://aucoeexam.in/) வெளியிடப்பட்டுள்ளது.


கூடுதல் விவரங்களையும் மேற்கண்ட வலைதளத்தில் அறிந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி