பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஒத்தி வைப்பா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 26, 2023

பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஒத்தி வைப்பா?

 

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித் தேர்வு ஒத்தி வைப்பது தொடர்பாக முதல்வரிடம் ஆலோசனை கேட்ட பிறகு அறிவிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.


சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் 6 முதல் 9ம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான குளிர்கால சிறப்பு பயிற்சி முகாமை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி இன்று காலை தொடங்கி வைத்தார்.


அப்போது அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் சாதிய தீண்டாமை இருக்கிறது என்பது தொடர்பான சர்வே வெளியிட்டு இருக்கிறார்கள். அது தொடர்பாக ஆய்வு நாங்களும் ஆய்வு செய்வோம். அவர்கள் கூறுவதுபோல தமிழ்நாட்டுப் பள்ளிகளில் இல்லை. 


மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சான்றிதழ்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். கனமழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஜனவரி 7ல் நடக்க உள்ள பட்டதாரி ஆசிரியர் பணிக்கான போட்டித் தேர்வை தள்ளிவைப்பது தொடர்பாக முதல்வரின் ஆலோசனை கேட்கப்படும். 


இரண்டு லட்சம்பேர் பங்கேற்ற முதுநிலை ஆசிரியர் போட்டித் தேர்வுகணினி வழியில் நடத்தியதில் 41 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வை பழைய முறையில் நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவரிடம் விளக்கம் கேட்கப்படும்.


மழை பாதித்த நெல்லை, தூத்துக்குடி, மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு நடக்கவில்லை.விடுபட்ட அந்த தேர்வுகள் ஜனவரி மாதம் நடத்தப்படும். பள்ளிக் கல்வித்துறை மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். இன்று தமிழக முதல்வர் 1000 வகுப்பறைகளை தொடங்கி வைத்தார். ஜனவரியில் 1200 வகுப்பறைகள் திறந்து வைக்க இருக்கிறார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

3 comments:

  1. டேய் கல்விச்செய்தி
    படிப்பவங்க மனநிலையை மாற்ற நினைக்காத

    ReplyDelete
  2. ஆலோசனை கேட்டுட்டே இருப்பதால் இனி ஆலோசனை உன் பெயரில் இணைந்து விடும்

    ReplyDelete
  3. பட்டதாரி ஆசிரியர்களே வருகின்ற MP தேர்தலில் திமுக விற்க்கு ஒட்டு போடுவதை சற்று தள்ளி வைக்கவும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி