கலை, அறிவியல் கல்லூரியில் சேர இன்று முதல் விண்ணப்பம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 6, 2024

கலை, அறிவியல் கல்லூரியில் சேர இன்று முதல் விண்ணப்பம்

தமிழகம் முழுவதும் உள்ள அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர மாணவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.


இதுகுறித்து கல்லூரி கல்வி இயக்குநரகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பு: தமிழகத்தில் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் இளநிலை பட்டப் படிப்புகளில் சுமார் 1.07 லட்சம் இடங்கள் உள்ளன. இதில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு இன்று (மே 6) தொடங்குகிறது. விருப்பம் உள்ளவர்கள் www.tngasa.in எனும் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்ப கட்டணமாக பொது பிரிவினர் ரூ.50, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.2 செலுத்த வேண்டும். இணைய வசதி இல்லாதவர்கள், மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள சேர்க்கை உதவி மையங்கள் (Admission Facilitation Centre - AFC) மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.


அதேபோல, இணையவழியில் கட்டணம் செலுத்த இயலாதவர்கள், இந்த உதவி மையங்களில் ‘The Director, Directorate of Collegiate Education, Chennai-15’ என்ற பெயரில் வங்கி வரைவோலை மூலமாக வழங்கலாம். உதவி மையங்கள் விவரம், மாணவர் சேர்க்கை கால அட்டவணை ஆகியவற்றை மேற்கண்ட இணையதளத்தில் அறியலாம். ஏதேனும் சந்தேகம் இருந்தால், 044–24343106 / 24342911 எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி