2026-ல் தமிழ்நாடு முதல்வர் யார்? - சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 29, 2025

2026-ல் தமிழ்நாடு முதல்வர் யார்? - சிவோட்டர் நடத்திய கருத்துக்கணிப்பு!

 

2026-ல் யார் தமிழக முதல்வராக வாய்ப்புள்ளது? என சிவோட்டர் நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.


2026 ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டுள்ளன. பல்வேறு கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளன.


இந்நிலையில், 2026ல் தமிழக முதல்வர் யார்? மக்கள், முதல்வராக யாரை விரும்புகிறார்கள்? என்று சிவோட்டர் நிறுவனம் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது.


அதில் தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின், 27% வாக்குகள் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளார்.


புதிதாக கட்சி தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் 18% ஆதரவுடன் இரண்டாமிடம் பெற்றுள்ளார்.


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, 10% ஆதரவுடன் மூன்றாமிடமும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை 9% ஆதரவுடன் நான்காமிடமும் பெற்றுள்ளனர்.


கடந்த பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துள்ள திமுகவே மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்புள்ளதாக இந்த கருத்துக்கணிப்பு கூறுகிறது.


அரசின் நடவடிக்கை பற்றிய கருத்துக்கணிப்பில் 15% பேர் மிகவும் திருப்திகரமாக இருந்ததாகவும் 36% பேர் ஓரளவு திருப்தி என்றும் 25% பேர் திருப்தியில்லை என்றும் கூறியுள்ள நிலையில் 24% பேர் தங்கள் முடிவைக் கூறவில்லை.

2 comments:

  1. கல்வி செய்தி அட்மின் திமுகவிற்கு சொம்பு அடிக்கும் வேலை வேண்டாம்... திமுக அழிவது உறுதி..... கடந்த முறை நான் திமுகவுக்கு வாக்களித்தவன்

    ReplyDelete
  2. டேய்....200rps ஊபிஸ்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி