இதுதொடர்பாக சென்னை ஐஐடி நேற்று வெளியிட்ட செய்தி்க்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: இன்றைய கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்துறையின் தேவை ஆகியவற்றை கருத்தில்கொண்டும், தொழில்நுட்ப முன்னேற்றங்களுக்கு மாணவர்களை தயார்படுத்தும் நோக்கிலும், சென்னை ஐஐடி-யில் பிஎஸ் வேதியியல், எம்டெக் எலெக்ட்ரிக் வெகிக்கில்ஸ், பிடெக் கம்ப்யூடேஷனல் இன்ஜினியரிங் மற்றும் மெக்கானிக்ஸ், பிடெக் இன்ஸ்ட்ருமென்டேஷன் மற்றும் பயோமெடிக்கல் இன்ஜினியரிங் ஆகிய 4 புதிய படிப்புகள் 2025-2026-ம் கல்வி ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
பிஎஸ் வேதியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் (ஐசர்) நடத்தும் நுழைவுத்தேர்வு அடிப்படையிலும், எம்டெக் எலெக்ட்ரிக் வெகிக்கில்ஸ் படிப்புக்கான சேர்க்கை கேட் நுழைவுத்தேர்வு அடிப்படையிலும், மற்ற இரு பிடெக் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை ஜெஇஇ நுழைவுத்தேர்வு அடிப்படையிலும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி