புதிதாக நியமனம் பெற்ற அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 16.02.2026 முற்பகல் முதல் பணியேற்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 12, 2026

புதிதாக நியமனம் பெற்ற அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 16.02.2026 முற்பகல் முதல் பணியேற்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

புதிதாக நியமனம் பெற்ற அனைத்து முதுகலை ஆசிரியர்களும் 16.02.2026 முற்பகல் முதல் பணியேற்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!

அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 2023-24, 2024-25 ஆண்டுக்கான முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்காக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு EMIS இணைய தளம் வாயிலாக பணி நியமன கலந்தாய்வு 7.2.2026 மற்றும் 9.2.2026 ஆகிய நாட்களில் நடத்தப்பட்டுள்ளது.


பணி நாடுநர்களுக்கு மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா 13.02.2026 (வெள்ளிக்கிழமை) அன்று சென்னை, நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.


மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெறுவதால், அன்று கலந்துகொள்ளும் 20 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் வெள்ளிக்கிழமை மாலை அல்லது சனிக்கிழமை காலை 11.00 மணியளவில் முதன்மைக்கல்வி அலுவலர்களால் பணி நியமன ஆணைகள் வழங்கப்பபட வேண்டும். அதன் பின்னர் தனி நபர் மருத்துவ தகுதிச் சான்று பெற்று அனைத்து முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் 16.02.2026 அன்று திங்கட்கிழமை முற்பகல் முதல் பணி நியமன ஆணை பெற்றுள்ள பள்ளிகளில் பணியேற்க அனுமதிக்கப்பட வேண்டும். இது குறித்து அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்திடவும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் முதன்மைக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி