திருக்குறள்
Accept if the counsel is good, no matter who gave it.
அறிவுரை நல்லதாய் இருப்பின் யார் கூறினாலும் கேள்
இரண்டொழுக்க பண்புகள் :.
1. எனது நோட்டில் உள்ள காகிதத்தை கிழிக்க மாட்டேன்.
2 காகிதம் கிழிப்பதால் எனது இருப்பிடம் அசுத்தம் ஆவது மட்டும் அல்லாமல் மரங்களை அழிக்கவும் அது மறைமுகமாக ஏதுவாகி விடும்.
பொன்மொழி :
ஒரு லட்சியத்தை மேற்கொள்ளுங்கள். அதை அடைவதற்காக விடாமுயற்சியுடன் முன்னேறுங்கள் - டாக்டர் அம்பேத்கர்
பொது அறிவு :
01.அரசியல் தத்துவத்தின் தந்தை (Father of Political Philosophy) என்று அழைக்கப்படுபவர் யார்?
02. 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் எப்போது நடைபெற உள்ளது?
English words :
தமிழ் இலக்கணம்:
கேளிர், கேளீர்
இரண்டு சொற்களும் ஒரே பொருளைத் தருமா இல்லாவிட்டால் வேறு வேறு பொருளைத் தருமா? வாருங்கள் பார்ப்போம்
இரண்டும் வேறு வேறு சொற்கள் தான்.
கேளிர் என்பது உறவினரைக் குறிக்கும்.
எ. கா - யாதும் ஊரே யாவரும் கேளிர்
கேளீர் என்பது கேளுங்கள் என்பதைக் குறிக்கும்.
எ. கா - நான் சொல்வதைக் கேளீர்
அறிவியல் களஞ்சியம் :
நமது சூரிய குடும்பத்தில் உள்ள நட்சத்திரங்களை விட பூமியில் உள்ள மரங்களின் எண்ணிக்கை அதிகம்.
மார்ச் 16
நீதிக்கதை
கைமேல் பலன் கிடைத்தது
அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவனாக இருந்தான். அரண்மணை ஜோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர்க்காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் ஜோதிடர் அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும் என்றார். மன்னன் சேவகனை அழைத்து காலையில் எங்கேயாவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் சொல் என்று கட்டளையிட்டான். சேவகன் தினமும் பொழுது விடியும் முன்பே தெருவிற்கு சென்றுவிடுவான்.
ஒரு நாள் அரண்மனைக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சியுடன் மன்னரிடம் சென்று விபரம் சொன்னான். இதைக் கேட்ட மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு சென்றான். அதற்குள் ஒரு காக்கை போய்விட்டது. மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு என்று உத்தரவிட்டான்.
சேவகன் சிரிக்க ஆரம்பித்தான். மன்னனுக்கு கோபம் அதிகமானது. ஏன் சிரிக்கிறாய் என்று சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி என்று உறுமினான். சேவகன் சொன்னான். மகா மன்னரே! இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா? என்றான். மன்னருக்கு அப்போதுதான் சகுனம் பார்ப்பது தவறு என்று உரைத்தது.
இன்றைய செய்திகள்

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி