School Morning Prayer Activities - 13.04.2026 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 12, 2026

School Morning Prayer Activities - 13.04.2026

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 13.04.2026

திருக்குறள் 

குறள் 470: 

பழமொழி :

Experience is the best teacher. 

அனுபவமே சிறந்த ஆசான்.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. படிப்பும் உழைப்பும் தான் மனித சமுதாயம் உயர ஒரே வழி.

2. எனவே படிப்பை எப்போதும் கைவிடமாட்டேன்.

பொன்மொழி : 

வணங்க ஆரம்பிக்கும் போதே வளர ஆரம்பிப்போம் - கோல்ட்ரிஜ்

பொது அறிவு : 

01.இந்தியாவில் மிளகு அதிகம் உற்பத்தி செய்யும் மாநிலம் எது?

கர்நாடகா- Karnataka

02. இந்தியாவையும் சீனாவையும் பிரிக்கும் எல்லைக்கோட்டின் பெயர் என்ன?

மெக்மஹோன் கோடு -
The McMahon Line

English words :

Resilience – Ability to recover from difficulties

Perseverance – Continued effort despite challenges

தமிழ் இலக்கணம்: 

பிறமொழிச் சொற்கள் தொடர் 

1. நபர் - அரபி

2. ஜாஸ்தி - உருது 

3. ரூபாய் - இந்துஸ்தானி 

4. துட்டு - டச்சு 

5. பீரோ - பிரெஞ்சு

அறிவியல் களஞ்சியம் :

பூமி மணிக்கு 1,000 மைல் வேகத்தில் சுழல்கிறது, ஆனால் அது விண்வெளியில் நம்பமுடியாத அளவிற்கு மணிக்கு 67,000 மைல் வேகத்தில் பயணிக்கிறது.

ஏப்ரல் 13

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் பிறந்தநாள்

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் (ஏப்ரல் 13, 1930 - அக்டோபர் 8, 1959) ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

நீதிக்கதை

 கரடியும் இரண்டு வழிப்போக்கர்களும்

ஒரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தார்கள். அவர்களில் ஒருவன் ராமு, மற்றொருவன் சோமு. இருவரும் இணை பிரியாத நண்பர்கள்.

ஒரு நாள் இருவரும் தேன் எடுப்பதற்காக காட்டுக்குப் பகுதிக்குச் சென்றனர். செல்லும் வழியில் ராமு சோமுவிடம், “நீ எதைபற்றியும் பயப்டாமல் என்னுடன் வா.

என்னைப் போன்ற நண்பனைக் காண முடியாது. என்ன துன்பம் வந்தாலும் நான் உன்னைக் காப்பாற்றுவேன்” என்று கூறினான்.

காட்டிலுள்ள பறவைகள், மரங்கள், காட்டு விலங்குகள் போன்றவற்றை வேடிக்கை பார்த்துக் கொண்டே இருவரும் நடந்து சென்றார்கள்.

அப்போது கரடி ஒன்று உறுமும் சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அவர்கள் செல்லும் வழியிலேயே, அந்த கரடி திடீரென வந்து கொண்டிருந்தது.

கரடியைக் கண்டதும் இருவரும் பயத்தில் ஓடத் தொடங்கினார்கள். கரடியும் அவர்களைத் துரத்தியது.

ஓடத் தொடங்கிய சில வினாடிகளில் மரம் ஒன்று இருப்பதை ராமு கண்டான். உடனடியாக அந்த மரத்தில் ராமு ஏறி விட்டான்.

சோமுவுக்கோ மரத்தில் ஏறத் தெரியாது என்று அறிந்திருந்தும் மரத்தில் ஏற முடியாதவனைக் கீழே விட்டு விட்டுத் தன்னை மட்டும் காத்துக்கொள்ள சுய நலத்துடன் ராமு நடந்து கொண்டான்.

சோமுவுக்கு மரம் ஏறத் தெரியாததால் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தான். கவலையுடன் எப்படி கரடியிடமிருந்து தப்புவது என்று அவசரமாக யோசித்தான்.

இறந்தவன் போல் நடித்தால் கரடி தன்னைக் கொல்லாது என்று ஒரு யோசனை தோன்ற, பின்னர் நிலத்தில் விழுந்து மூச்சை அடக்கிக் கொண்டு இறந்தவனைபோல் படுத்துக் கொண்டான்.

அப்பொழுது கரடியும் அங்கு வந்து சேர்ந்தது. படுத்திருந்தவனை உண்பதற்காக அருகில் வந்த கரடி கீழே விழுந்து கிடந்தவன் காதருகே சென்று நுகர்ந்து பார்த்தது.

கரடி சோமுவை முகர்ந்து பார்த்ததை, மேலேயிருந்து பார்த்த ராமு, கரடி சோமுவிடம் ஏதோ சொல்கிறது என்று தவறுதலாக புரிந்து கொண்டான். பிறகு அவன் இறந்தவன் என்று முடிவு செய்து அங்கிருந்து நகர்ந்து போய் விட்டது.

கரடி செல்வதை மரத்தின் மேலிருந்து பார்த்த ராமு, கீழே இறங்கி வந்து சோமுவை எழுப்பினான். “கரடி சென்று விட்டது இனி எழும்பு நாம் தப்பி விட்டோம்” என்று ராமு கூறினான்.

சோமுவும் எழுந்து தன் யோசனை வெற்றியடைந்ததை எண்ணி நிம்மதியடைந்தான்.

கீழே படுத்திருந்தவன் எழுந்து அமர்ந்தான்.

ராமு சோமுவிடம், “கரடி உன் காதில் என்ன இரகசியம் சொன்னது?” என்று கேட்டான்.

அதற்குப் சோமு, “ஆபத்தில் உதவாத நண்பனை என்றுமே நம்பக் கூடாது! என்று சொல்லிவிட்டுப் போனது” என்றான்.

இப்பதிலால், ராமு தன் சுயநலப் புத்தியை எண்ணி நொந்து கொண்டான். சோமுவோ இனி மேல் எங்கள் நட்பு நீடிக்க வேண்டாம் என்று கூறிக்கொண்டு கொண்டு தனியே நடந்து சென்றான்.

நீதி: ஆபத்தில் உதவாதது நட்பல்ல.

இன்றைய செய்திகள்

13.04.2026

⭐ஒன்று முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை

⭐டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளில் நடைபெறும் பெரும் மோசடிகளை தடுக்க RBI ஒரு புதிய திட்டத்தை பரிசீலித்து வருகிறது. 

⭐ மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தை தணிக்கும் நோக்கில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி பேச்சுவார்த்தை  பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் தொடங்குகிறது.

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀2026 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் 15 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, தனது அதிரடி ஆட்டத்தால் ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் மிரள வைத்துள்ளார்.

Today's Headlines

⭐ Summer holidays for students from Classes 1 to 9 will begin on April 17 onwards.

⭐ The RBI is considering a new scheme to prevent large-scale fraud in digital transactions.

⭐ Peace talks between the United States and Iran will begin in Islamabad, the capital of Pakistan, to reduce war tensions in the Middle East.

 SPORTS NEWS 

🏀 In the 2026 IPL series, 15-year-old Vaibhav Suryavanshi, playing for Rajasthan Royals, has stunned the entire cricket world with his explosive performance.

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி