நீட் கட்டணத்தை திரும்ப பெற ஜூன் 22 வரை அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 29, 2026

நீட் கட்டணத்தை திரும்ப பெற ஜூன் 22 வரை அவகாசம் நீட்டிப்பு

 நீட் நுழைவுத் தேர்வு கட்டணத்தை திரும்ப பெற ஜூன் 22 -ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

மருத்துவ இளநிலை படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த 3-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த தேர்வின் வினாத்தாள் முன்கூட்டியே கசிந்ததால் நாடு முழுவதும் நீட் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, வரும் ஜூன் 21-ம் தேதி நீட் மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

நீட் நுழைவுத் தேர்வுக்கு ஏற்கெனவே செலுத்திய கட்டணம் திரும்ப வழங்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அறிவித்தது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 27-ம் தேதியுடன் நிறைவுப் பெற்றது. இந்த சூழலில் காலக்கெடு நீட்டிக்கப்பட்டு வரும் ஜூன் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

கடந்த 3-ம் தேதி நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை 22 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதினர். அவர்களில் 13 லட்சம் பேர் தங்கள் வங்கிக் கணக்கு விவரங்களை சமர்ப்பித்து உள்ளனர். இதுவரை சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள் neet.nta.nic.in இணையம் வாயிலாக தங்களது வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்யலாம் என்று என்டிஏ தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி