இளநிலை படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தேர்வு: ஹால்டிக்கெட் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 7, 2026

இளநிலை படிப்புகளுக்கான ‘க்யூட்’ நுழைவுத் தேர்வு: ஹால்டிக்கெட் வெளியீடு

 

இளநிலை படிப்​பு​களுக்​கான க்யூட் நுழைவுத் தேர்​வுக்​குரிய ஹால்​டிக்​கெட்​களை என்​டிஏ வெளி​யிட்​டுள்​ளது. நாடு முழு​வதும் உள்ள மத்​திய பல்​கலைக்​கழகங்​கள், அதன்​கீழ் இயங்​கும் கல்​லூரி​களில் இளநிலை, முது​நிலை பட்​டப்​படிப்​பு​களில் சேர பல்​கலைக்​கழக பொது நுழைவுத் தேர்​வில் (க்​யூட்) தேர்ச்சி பெற வேண்​டும். இந்த தேர்வை தேசிய தேர்​வு​கள் முகமை (என்​டிஏ) ஆண்​டு​தோறும் நடத்தி வரு​கிறது.

அதன்​படி, வரும் கல்​வி​யாண்​டில் (2026-27) இளநிலை படிப்​பு​களுக்​கான க்யூட் நுழைவுத் தேர்வு மே 11 முதல் 31-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்​கான இணை​யதள விண்​ணப்​பப் பதிவு கடந்த ஜன. 3-ல் தொடங்கி பிப். 26-ம் தேதி வரை நடை​பெற்​றது. இந்த தேர்​வெழுத சுமார் 15 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் விண்​ணப்​பித்​துள்​ளனர்.

இந்​நிலை​யில், தேர்வுக்​கான ஹால்​டிக்​கெட்​களை என்​டிஏ வெளி​யிட்​டுள்​ளது. அவற்றை https://cuet.nta.nic.in/ எனும் இணை​யதளத்​தில் சென்று பதி​விறக்​கம் செய்​துக் கொள்​ளலாம். இது​சார்ந்த கூடு​தல் தகவல்​களை www.nta.ac.in என்ற என்​டிஏ இணை​யதளத்​தில் அறிந்து கொள்​ளலாம்.

ஏதேனும் சந்​தேகம் இருப்​பின் மாணவர்​கள் 011-40759000 என்ற தொலைபேசி எண் அல்​லது cuet-ug@nta.ac.in எனும் மின்​னஞ்​சல் முகவரிக்கு தொடர்​புக் கொண்டு விளக்​கம் பெறலாம் என்று என்​டிஏ வெளி​யிட்ட அறி​விப்​பில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி