தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜூலை 10-க்குள் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2026

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு ஜூலை 10-க்குள் விண்ணப்பிக்கலாம்

 

அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 2026-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தங்கள் மாவட்டத்தில் அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களும் ஜூலை 10-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்த வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட தேர்வுக்குழு அமைக்கப்பட்டு ஆசிரியர்களை தேர்வுசெய்து தேர்வு பட்டியலை ஜூலை 14 முதல் 21-ம் தேதிக்குள் ஆன்லைனில் அனுப்ப வேண்டும்.

மாவட்ட தேர்வுக்குழுவில் சம்பந்தப்பட்ட மாவட்டத்தின் முதன்மை கல்வி அதிகாரி தலைவராகவும், மாநில பிரதிநிதியாக மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் முதல்வரும், மாவட்ட ஆட்சியரின் பிரதிநிதியாக சிறந்த கல்வியாளர் ஒருவரும் இடம்பெறுவர்.

உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி எவ்விதமான புகாருக்கும் இடமில்லாமல் செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி