தமிழக அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளை கட்டாயம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 14, 2026

தமிழக அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளை கட்டாயம்

தமிழக அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி பாடவேளை கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்: தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலர் தலைமையில் கடந்த மே 27-ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை உடற்கல்வி பாடவேளை கட்டாயம் இடம்பெற வேண்டும். அந்த பாடவேளைகளில் மாணவர்களுக்கு உடற்பயிற்சி வகுப்புகள் நடத்த அறிவுறுத்த வேண்டும்.

அனைத்து உடற்கல்வி இயக்குநர்களும், ஆசிரியர்களும் உடற்கல்வி பாடவேளையில் அதற்கான பாடத் திட்டத்தை பயன்படுத்தி வகுப்புகள் எடுக்க வேண்டும். விளையாட்டில் விருப்பம் உள்ள மாணவர்களுக்கு, பள்ளி நேரம் முடிந்த பிறகு, சிறப்பு விளையாட்டுக்கான பயிற்சி வகுப்புகளை எடுக்க வேண்டும்.

எந்தெந்த அரசுப் பள்ளிகளில் மைதானங்கள் பயன்பாட்டில் இல்லை என்ற விவரங்களை உடனே முதன்மை உடற்கல்வி ஆய்வாளர் அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும். தங்கள் மாவட்டங்களில் மாநில, தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விளையாட்டுகளில் சாதனை படைத்த பள்ளிகள் விவரம், எந்த விளையாட்டுகள் என்ற விவரத்தை முதன்மை உடற்கல்வி ஆய்வாளர்களுக்கு உடனே தெரிவிக்க வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

1 comment:

  1. 10th Social Science Line by Line Questions for TET Paper 2 | 100 முக்கிய வினா விடைகள்
    https://tamilmoozi.blogspot.com/2026/06/10th-social-science-line-by-line.html

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி