School Morning Prayer Activities - 23.06.2026 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2026

School Morning Prayer Activities - 23.06.2026

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 23.06.2026

திருக்குறள்

பால் :  பொருட்பால்          

 இயல் : அரசியல்   

அதிகாரம்:44   குற்றங்கூறாமை

குறள் எண்:435

குறள்: 

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். 

பொருள்:

  குற்றம் வருவதற்கு முன்பே, வராமல் காத்துக் கொள்ளாதவன் வாழ்க்கையானது, நெருப்பின் முன்னர் வைத்த வைக்கோல் போர் போலக் கெடும் .

பழமொழி :

A contended mind is a continual feet

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.

இரண்டொழுக்க பண்புகள் :.

1. என் தாய் தந்தை சொல்படி கேட்டு நடப்பேன். அவர்கள் தான் என் மீது முதலில் அக்கறை கொண்டவர்கள் என்பதை நான் நன்கு அறிவேன் .

 2. பிறர் என்னிடம் நட்பு பாராட்டுவதைப் பற்றி என் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்வேன்.

பொன்மொழி : 

"நீங்கள் உலகில் காண விரும்பும் மாற்றமாக நீங்களே இருங்கள்.""மகாத்மா காந்தி

Thought for the Day :

"Be the change that you wish to see in the world."

பொது அறிவு : 

1. உயிர் காக்கும் ஹார்மோன் எது? 

கார்டிசோல்

2 . எந்த தனிமம் புற்றுநோய் செல்களை அழிக்கிறது?

கோபால்ட் -60

English words :

Arrived - reached the place,வந்து சேர்தல்.          

Profession - Job or work, தொழில்.

புவியியலும் சுற்றுசூழலும் :

"உலகம் பொதுவாக 7 கண்டங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது . Asia (ஆசியா)

Africa (ஆப்பிரிக்கா)

North America (வட அமெரிக்கா)

South America (தென் அமெரிக்கா)

Antarctica (அண்டார்டிகா)

Europe (ஐரோப்பா)

Australia (ஆஸ்திரேலியா) ஆகும்"

NMMS :

ஒரு கம்பியின் வழியே 60 கூலூம் மின்னூட்டமானது 2 நிமிடத்திற்கு பாய்ந்தால் கடத்தி வழியே செல்லும் மின்னோட்டத்தின் அளவு யாது??

மின்னூட்டம் q. = 60 கூலூம்

நேரம் t. = 2 நிமிடம் ×  60விநாடிகள் 

= 120 விநாடிகள்

    மின்னோட்டம் l = q/  t = 60C/120s = 0.5 A               

   (1) 0.5 ஆம்பியர்                   (2) 0.1 ஆம்பியர்                          

(3) 0.25 ஆம்பியர்                      (4) 120 ஆம்பியர்                                

 விடை: (1) 0.5 ஆம்பியர்

ஜூன் 23

கிஜூபாய் பதேக்கா அவர்களின் நினைவுநாள்


கிஜூபாய் பதேக்கா (Gijubhai Badheka, 15 நவம்பர் 1885 – 23 ஜூன் 1939) சித்தல் நகரில் பிறந்த இவர், இந்தியாவில் மாண்டிசோரி கல்வி முறையை அறிமுகப்படுத்துவதில் பெரும் பங்கு வகித்தார். இவர் “மீசை உள்ள அம்மா“ எனவும் அறியப்படுகிறார். முதலில் அவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றினார். 1923 – ல் அவருடைய மகன் பிறந்த பிறகு, அவர் குழந்தை வளர்ச்சி மற்றும் கல்வியில் தனது ஆர்வத்தை செலுத்தினார். 1920-ல் பதேகா “ பால மந்திர்” என்னும் முன் தொடக்கப் பள்ளியை  நிறுவினார். “ பகல் கனவு“ போன்ற பல கல்விசார் நூல்களை வெளியிட்டுள்ளார்.

நீதிக்கதை

அம்மாவின் அறிவுரை. 

கண்ணனூர் என்ற கிராமத்தில் ஹரீஷ் என்ற சிறுவன் வாழ்ந்து வந்தான். அவனுடைய அம்மா, அப்பா எப்போதும் நல்ல அறிவுரைகளைக் கூறுவார்கள். ஆனால் ஹரீஷ்அவர்களுடைய பேச்சைக் கேட்காமல் தன் விருப்பப்படி நடந்துகொள்வான்.

ஒருநாள் பள்ளியில் இருந்து வீட்டிற்கு வரும்போது, நண்பர்களுடன் சேர்ந்து ஆற்றங்கரையில் விளையாடச் சென்றான். செல்லும் முன் அவனுடைய அம்மா, “மாலை நேரத்தில் ஆற்றங்கரைக்கு போகாதே, அது ஆபத்தான இடம்” என்று எச்சரித்தார். ஆனால் ஹரீஷ் அதைக் கவனிக்கவில்லை.

விளையாடிக்கொண்டிருந்தபோது அவன் தவறி வழுக்கி விழுந்தான். அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த ஒரு பெரியவர் அவனை காப்பாற்றினார்.

வீட்டிற்கு வந்த ஹரீஷ், அம்மாவின் அறிவுரையை மதிக்காமல் நடந்ததற்காக வருந்தினான். “அம்மா, இனிமேல் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பேன்” என்று கூறினான்.

அதன் பிறகு அவன் பெற்றோரின் அறிவுரைகளை மதித்து நடக்கத் தொடங்கினான். அவன் வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் இருந்தது.

நீதி: பெற்றோரின் அறிவுரையும் அன்பும் நம் நலனுக்காகவே இருக்கும்; அவர்களை மதித்து நடக்க வேண்டும். 🌷👨‍👩‍👦 

இன்றைய செய்திகள்

23.06.2026

🗒️மறுதேர்வு எழுதிய மாணவர்களுக்கான முடிவுகள் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக என்.டி.ஏ (NTA) தலைவர் அறிவித்துள்ளார்.

🗒️விளையாட்டு விடுதியில் தங்கிப் பயிலும் மாணவ, மாணவியருக்கான தினசரி உணவுப்படி உயர்த்தப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவித்துள்ளார்.

🗒️இந்தியா தலைமையில் 2026-ம் ஆண்டிற்கான பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் எரிசக்தி துறை மந்திரிகள் பங்கேற்கும் கூட்டம், ஹரியானா மாநிலம் குருகிராமில் நடைபெறவுள்ளது.

 *விளையாட்டுச் செய்திகள்*

🏀ஆசிய ரிலே சாம்பியன்ஷிப்: தங்கம் வென்று வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி.

🏀 உலகக் கோப்பை குத்துச்சண்டை: இந்திய வீராங்கனைக்கு தங்கப்பதக்கம் பரிசு.

Today's Headlines

🗒️ The Chairman of the National Testing Agency (NTA) has announced that the results for students who appeared for the re-examination will be released soon.

🗒️ Minister Aadhav Arjuna has announced an increase in the daily food allowance for boys and girls staying and studying in sports hostels.

🗒️ Under India's presidency, the meeting of Energy Ministers of the BRICS member nations for the year 2026 will be held in Gurugram, Haryana.

Sports News

🏀 Asian Relay Championships: The Indian women's team created history by winning the gold medal.

🏀 At the World Cup Boxing Championship, an Indian woman boxer was awarded the gold medal.


Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி