அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5% ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ‘போனஃபைடு’ சான்று கட்டாயம் இல்லை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 7, 2026

அரசுப் பள்ளி மாணவர்கள் 7.5% ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க ‘போனஃபைடு’ சான்று கட்டாயம் இல்லை

 

எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டில் விண்​ணப்​பிக்​கும் அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு ‘போனஃபைடு’ சான்​றிதழ் கட்​டா​யம் இல்லை என்று மருத்​து​வக்கல்வி இயக்​குநரகம் தெரி​வித்​துள்​ளது.

தமிழகத்​தில் எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களுக்​கான மாணவர் சேர்க்கை கலந்​தாய்​வுக்கு விண்​ணப்​பிப்​பது சுகா​தா​ரத் துறை இணை​யதளத்​தில் (www.tnmedicalselection.org) கடந்த 29-ம் தேதி தொடங்கி நடை​பெற்று வரு​கிறது. ஆன்​லைனில் மாணவ, மாணவி​கள் ஆர்​வத்​துடன் விண்​ணப்​பித்து வரு​கின்​றனர்.

எம்​பிபிஎஸ், பிடிஎஸ் படிப்​பு​களில் அரசுப் பள்ளி மாணவர்​களுக்கு 7.5 சதவீத இடஒதுக்​கீடு வழங்​கப்​பட்டு வரு​கிறது. இந்த இடஒதுக்​கீட்​டில் சேரும் அரசுப்பள்ளி மாணவர்​கள், தாங்கள் படித்த பள்​ளி​களில் ‘போனஃபைடு’ சான்​றிதழ் பெற்று விண்​ணப்​பித்து வந்​தனர்.

அந்த பள்​ளி​யில் படித்த மாணவர்​தான் என்​பதை உறு​திப்படுத்த, இச்​சான்​றிதழ் பெறப்​பட்​டது. இந்​நிலை​யில், மருத்​து​வப் படிப்​பு​களுக்கு விண்​ணப்​பிக்க, ‘போனஃபைடு’ சான்​றிதழ் தேவை​யில்லை என அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக மருத்​து​வக் கல்​வி, ஆராய்ச்சி இயக்​ககத்​தின் மாணவர் தேர்​வுக் குழு வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில், ‘மருத்​து​வப் படிப்​பில் 7.5 சதவீத உள் இடஒதுக்​கீட்​டில் சேரும் மாணவர்​களில், 2022- 23-ம் ஆண்டு மற்​றும் அதற்கு பிந்​தைய ஆண்​டு​களில் பிளஸ் 2 படித்த மாணவர்கள் விண்​ணப்​பத்​தில், ‘போனஃபைடு’ சான்​றிதழ் இணைக்​கத் தேவை​ யில்​லை.

அவர்​களது தகுதி உள்​ளிட்ட விவரங்​கள், பள்​ளிக்​கல்​வித் துறை​யின் ‘எமிஸ்’ தகவல் அமைப்பு மூலம் உறுதி செய்து கொள்​ளப்​படும்’ என்​று கூறப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி