பணி​யில் உள்ள ஆசிரியர்களுக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 9, 2026

பணி​யில் உள்ள ஆசிரியர்களுக்கான ‘டெட்’ தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை

 

பணி​யில் உள்ள ஆசிரியர்​களுக்கு நடத்​தப்​பட்ட சிறப்பு தகு​தித் தேர்வு (டெட்) முடிவு​களை வெளி​யிட கூடாது என்று இடைக்​காலத் தடை விதித்து சென்னை உயர் நீதி​மன்​றம் உத்தரவிட்​டுள்​ளது.

கட்​டாயக் கல்வி உரிமை சட்​டத்​தின்​படி, பணி​யில் உள்ள ஆசிரியர்​களும் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி பெற வேண்​டும் என்று உச்ச நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது. ஐந்து ஆண்​டு​களில் பணி ஓய்வு பெறவுள்ள ஆசிரியர்​களுக்​குத் தகு​தித் தேர்​வில் தேர்ச்சி பெறு​வதற்​கான காலக்​கெடுவை மேலும் 3 ஆண்​டு​களுக்கு நீட்​டித்து உச்ச நீதி​மன்​றம் கடந்த மே மாதம் உத்​தர​விட்​டது.

இந்​நிலை​யில், பிற்​படுத்​தப்​பட்ட, மிக​வும் பிற்​படுத்​தப்​பட்ட, சீர் மரபினர் மற்​றும் மாற்​றுத் திற​னாளி​களுக்​கான குறைந்​த​பட்ச தேர்ச்சி மதிப்​பெண்​களை 55-ல் இருந்து 50 சதவீத​மாக​வும், பட்​டியலின மற்​றும் பழங்​குடி​யினருக்​கான குறைந்​த​பட்ச மதிப்​பெண்​களை 45-ல் இருந்து 40 சதவீத​மாக​வும் குறைத்து தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் அரசாணை பிறப்​பித்​தது.

இதே​போல் பொதுப் பிரி​வினருக்​கான குறைந்​த​பட்ச மதிப்​பெண்​களை 60-ல் இருந்து 50 சதவீத​மாக குறைக்க கோரி பொதுப்​பிரிவைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் உள்​ளிட்ட 3 ஆசிரியர்​கள், சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் ஏற்​கெனவே வழக்கு தொடர்ந்​திருந்​தனர்.

அதில், பிஹாரில் பொதுப்​பிரி​வினருக்கு குறைந்​த​பட்ச தேர்ச்சி மதிப்​பெண்​கள் 50 சதவீத​மாக நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதே​போல தமிழகத்​தி​லும் பொதுப்​பிரி​வினருக்​கான மதிப்​பெண்​களைக் குறைக்க உத்​தர​விட வேண்​டும்.

பொதுப்பிரிவினர்

ஏற்​கெனவே முது​நிலை பட்​ட​தாரி ஆசிரியர் பணிக்கு விண்​ணப்பிக்க பொதுப்​பிரிவு ஆசிரியர்​களுக்கு 50 சதவீத மதிபெண்​கள் மட்​டுமே நிர்​ண​யிக்​கப்​பட்​டுள்​ளது. இதுதொடர்​பாக பரிசீலிக்க அரசுக்கு உத்​தர​விட வேண்​டும் என்று அவர்​கள் கோரி​யிருந்​தனர்.

பணி​யில் உள்ள ஆசிரியர்​களுக்​கான சிறப்பு தகு​தித் தேர்வு நடந்து முடிந்​துள்ள நிலை​யி்ல், இந்த வழக்கு நீதிபதி பி.டி.ஆஷா முன்​னிலை​யில் நேற்று விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, பொதுப்​பிரிவு ஆசிரியர்​களுக்​கான தகு​தித் தேர்​வில் குறைந்​த​பட்ச தேர்ச்சி மதிப்​பெண்​களைக் குறைப்​பது தொடர்​பாகத் தமிழக அரசு கொள்கை முடிவு எடுக்​க​வுள்​ள​தாக அரசு தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

இந்த கொள்கை முடிவை நீதி​மன்​றத்​தில் தெரிவிக்க ஏது​வாக வழக்கு விசா​ரணையை ஜூலை 24-ம் தேதிக்கு தள்ளி வைத்​துள்ள நீதிப​தி, அது​வரை சிறப்பு தகு​தித் தேர்​வுக்​கான முடிவு​களை வெளி​யிட கூடாது என்று இடைக்​காலத் தடை வி​தித்​து உத்​தர​விட்​டுள்​ளார்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி