தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொறுப்பு) கே.ராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிவிப்பு விவரம்: ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம், அரசு, அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் 2026 ஜூலை பருவ கல்வியியல் பிஎச்டி மாணவர் சேர்க்கைக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை ஆசிரியர் கவ்வியியல் பல்கலைக்கழகத்தின் இணைய தளத்தில் (www.tnteu.ac.in) பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பப் படிவத்தை பதிவாளருக்கு செப்டம்பர் 21-க்குள் அனுப்ப வேண்டும். நுழைவுத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். ஜெஆர்ஃஎப், நெட், ஸ்லெட், எம்.பில் தேர்ச்சி பெற்றிருப்போருக்கு நுழைவுத்தேர்விலிருந்து விலக்கு அளிக்கப்படும். அவர்கள் விண்ணப்பித்தால் மட்டும் போதுமானது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி