பள்ளிக் கல்வி - 2026-2027 ஆம் கல்வியாண்டிற்கான காலாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து பள்ளித் திறக்கும் நாள் அறிவிப்பு - சார்ந்து.
பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் துவக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் காலாண்டுத்தேர்வு விடுமுறை 26.09.2026 முதல் 04.10.2026 வரை எனத் தெரிவிக்கப்பட்டு 05.10.2026 திங்கட்கிழமை அன்று அனைத்துவகைப் பள்ளிகளும் திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.
காலாண்டுத்தேர்வு விடுமுறை முடிந்து பள்ளித் திறக்கும் நாள் அன்று 1 முதல் 7 வகுப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடநூல் வழங்கப்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள், மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பள்ளிகள் திறக்கும் நாளன்று அனைத்து மாணவர்களுக்கும் விடைத்தாட்களை வழங்கி, மதிப்பெண்களை உரிய பதிவேடுகளில் / EMIS-ல் பதிவு செய்ய தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நடவடிக்கை எடுக்க மேலும், விஜயதசமி அன்று அரசு, அரசு உதவி பெறும் துவக்க / நடுநிலை/உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 1-ஆம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கை நடைபெற உரிய கேட்டுக்கொள்ளப்படுகிறது. தங்கள் மாவட்டத்தில் அரசு மாணவர்களின் சேர்க்கை விவரங்களை EMIS கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில் பள்ளியினால் உள்ளீடு செய்திடுமாறும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி