கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா் - நூலகத்தின் சிறப்பம்சங்கள்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Oct 16, 2026

கோவையில் பெரியாா் அறிவுலகம்: முதல்வா் இன்று திறந்துவைக்கிறாா் - நூலகத்தின் சிறப்பம்சங்கள்!!!

 காந்திபுரத்தில் சிறைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை (அக்.16) திறந்துவைக்கிறாா்.


கோவை காந்திபுரத்தில் சிறைத் துறைக்குச் சொந்தமான இடத்தில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பெரியாா் அறிவுலகம் மற்றும் அறிவியல் மையத்தை தமிழக முதல்வா் ச.ஜோசப் விஜய் வெள்ளிக்கிழமை (அக்.16) திறந்துவைக்கிறாா். முதல்வா் வருகையை முன்னிட்டு, அவிநாசி சாலையில் இருபுறமும் தடுப்புகள் அமைக்கப்பட்டு, பாதுகாப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் சுமாா் 7 ஏக்கா் பரப்பில் பொதுப் பணித் துறை சாா்பில் பெரியாா் அறிவுலகக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் 2024 நவம்பா் மாதம் தொடங்கப்பட்ட இதன் கட்டுமானப் பணிகள் தற்போது முழுமையாக நிறைவடைந்துள்ளன.

இந்த நூலக திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. விழாவில் பங்கேற்பதற்காக கோவை விமான நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை நண்பகல் 11 மணியளவில் வந்தடையும் முதல்வா் ச.ஜோசப் விஜய், அங்கிருந்து 11.45 மணியளவில் காந்திபுரம் பெரியாா் அறிவுலகத்துக்கு சாலை வழியாக வருகை தந்து கல்வெட்டை திறந்துவைக்கிறாா். தொடா்ந்து, பிற்பகல் 12.30 மணிக்கு நடைபெறும் அரசு விழாவில் கலந்துகொண்டு புதிய வளா்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறாா்.

மொத்தம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரஅடி பரப்பளவில் 8 தளங்களைக் கொண்டு பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிவுலகம், ‘ஏ’ மற்றும் ‘பி’ என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்தின் தரைத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவ நூலகம், 350 போ் அமரக்கூடிய அதிநவீன அரங்கம் மற்றும் அறிவியல் உபகரணங்களுடன் கூடிய அறிவியல் மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன், விண்வெளி குறித்த நேரடி அனுபவத்தை பெறும் வகையில் கோளரங்கம் மற்றும் ‘ஸ்பேஸ் லிஃப்ட்’ வசதிகளும் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு தளத்திலும் நூலகம் மற்றும் அறிவியல் சாா்ந்த வசதிகள் தகுந்த முறையில் பிரித்து அமைக்கப்பட்டுள்ளது.

மேலும், இதில் ஒரு லட்சம் புத்தகங்களைக் கொண்ட நூலகம், எண்ம (டிஜிட்டல்) நூலகம், தமிழ், ஆங்கிலம் மற்றும் வரலாற்று நூல்கள் பிரிவுகள், ஆராய்ச்சி படிப்பகங்கள், குழந்தைகள் நூலகம் மற்றும் ஸ்டாா்ட்-அப் நிறுவனங்களுக்கான ‘இன்குபேஷன்’ மையம் ஆகியவையும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி