திருக்குறள்
இயல் : அரசியல்
அதிகாரம்:53. சுற்றந் தழால்
குறள் எண்:524
குறள்:
சுற்றத்தால் சுற்றப் படஒழுகல் செல்வந்தான்
பெற்றத்தால் பெற்ற பயன்.
பொருள்:
தன் சுற்றத்தால் தான் சூழப்படும்படி அவர்களைத் தழுவி வாழ்வதே ஒருவன் செல்வத்தைப் பெற்றதன் பயன் ஆகும்.
Too much rest is rust.
துலக்காத ஆயுதம் துருப்பிடிக்கும்.
இரண்டொழுக்க பண்புகள் :.
1. என்னால் முடிந்த வரை இயற்கையை பாதிக்காத வகையில் நடந்துகொள்வேன் .
2. என் பகுதியைச் சுற்றியுள்ள நீர் நிலைகளை அசுத்தப் படுத்தாமல் பாதுகாப்பேன்.
பொன்மொழி :
“ஒரு சிறிய விளக்கும் இருளை அகற்றும்; ஒரு சிறிய நற்செயலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.”
Thought for the Day :
Peace begins when you stop fighting what you cannot change
பொது அறிவு :
1. உள்ளாட்சி தினம் எப்போது கொண்டாடப்படுகிறது?
நவம்பர் 1.
2.உள்ளாட்சி அமைப்பின் தந்தை யார்?
ரிப்பன் பிரபு.
English words :
1. Resilient - மீண்டெழும் - Tenacious
2. Ambiguous - தெளிவற்ற - Equivocal
புவியியலும் சுற்றுசூழலும் :
பின்னர் கழிவுகளைத் தரம் பிரித்து அதாவது
* மக்கும் கழிவுகள் – உணவுக் கழிவுகள், காய்கறித் தோல்கள்.
* மக்காத கழிவுகள் – பிளாஸ்டிக், கண்ணாடி, உலோகம் போன்றவை.
வாகனங்கள் மூலம் உரிய செயலாக்க மையங்களுக்குக் கொண்டு செல்லப்படுகின்றன.
NMMS :
MAT
நவம்பர் 05
விராட்கோலி அவர்களின் பிறந்தநாள்
உலக சுனாமி விழிப்புணர்வு நாள் (World Tsunami Awareness Day)
உலக சுனாமி விழிப்புணர்வு நாள் (World Tsunami Awareness Day) ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் மாதம் 5 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படுகிறது. சுனாமியின் அபாயகரமான விளைவுகள், சுனாமி முன்னெச்சரிக்கை மற்றும் சுனாமியின் முக்கியத்துவத்தின் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்நிகழ்வு நடத்தப்படுகிறது.சுனாமி பாதிப்புகள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதன் மூலம் அது குறித்த பாதிப்பை பெருமளவில் குறைக்க முடியும் என்பதே இதன் நோக்கமாகும்.
நீதிக்கதை
பெருமையே அழிவுக்குக் காரணம்
ஒரு அழகான காட்டில் ஒரு மயில் வாழ்ந்து வந்தது. அதன் அழகான தோகையைக் கண்டு மற்ற விலங்குகள் பாராட்டின.
மயிலுக்குத் தன் அழகின் மீது பெருமை அதிகமானது. மற்ற பறவைகளைத் தாழ்வாக எண்ணியது. குறிப்பாக, தன்னுடைய தோகையைப் போல அழகில்லாத காகத்தை அடிக்கடி கேலி செய்தது.
ஒருநாள் காட்டில் பலத்த மழை பெய்தது. மயில் தன் அழகான தோகையை விரித்துக்கொண்டு மழையில் பெருமையாக நடனமாடியது. அப்போது திடீரெனப் பலத்த காற்று வீசியது. அடித்த பலத்த காற்றில் அதன் தோகை ஒரு மரத்தில் சிக்கி, மயிலால் பறக்க முடியாமல் போனது.
அருகில் இருந்த காகம் இதைக் கவனித்தது. உடனே மற்ற பறவைகளை அழைத்து, மயிலுக்கு உதவியது. அனைவரும் சேர்ந்து மயிலைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்றனர்.
மயில் தன் தவறை உணர்ந்தது. தன்னை எப்போதும் கேலி செய்த காகமே தனக்கு உதவியதை நினைத்து வெட்கப்பட்டது.
“என் அழகைப் பற்றி நான் பெருமைப்பட்டேன். ஆனால் உங்களுடைய உதவும் மனப்பான்மையைப் புரிந்துகொள்ளவில்லை. என்னை மன்னித்துவிடுங்கள்,” என்று மயில் கூறியது.
அன்றிலிருந்து மயில் மற்ற பறவைகளை மதித்து, அனைவருடனும் அன்பாக வாழ்ந்தது.
நீதிக்கருத்து
பெருமை அழிவைத் தரும்; பணிவு உயர்வைத் தரும்.
இன்றைய செய்திகள்


No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி