TNTET-2026 ஜூலை மாதம் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில்_ வெற்றி பெற்ற விவரங்களை ஆசிரியர்கள் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வழிகாட்டி நெறிமுறைகள் அளித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் வெளியீடு.
உச்சநீதிமன்றம் தீர்ப்பாணையின்படி, இலவச மற்றும் கட்டாயக் கல்வி பெறும் குழந்தைகளின் உரிமைச் சட்டம், 2009 இன் பிரிவு 23 இன் படி, ஆசிரியர் தகுதித் தேர்வில் (TET) தேர்ச்சி பெறுவது ஆசிரியர்களுக்கான குறைந்தபட்ச தகுதிகளில் கட்டாயமான ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்று ஆண்டுகளுக்குள் (3108.2028க்குள்) ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள் பணியில் தொடர முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக கடந்த 2025 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற விவரங்கள் ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் உரிய பதிவுகள் மேற்கொள்ள வேண்டும் என பார்வை 2-ல் காணும் செயல்முறைகள் மூலம் தெரிவிக்கப்பட்டது.
தற்போது இவ்வாண்டில் ஜூலை 2026-ல் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்விற்கான தேர்ச்சி முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அது தொடர்பாக தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் பதிவிறக்கம் (பதிவிறக்கம்) செய்த சான்றினை ஊதியம் பெற்று வழங்கும் அலுவலர் மற்றும் பணிப்பதிவேடு பராமரிக்கும் அலுவலரான வட்டாரக் கல்வி அதிகாரிகளுக்கு விண்ணப்பித்து அவ்விண்ணப்பத்தினைப் பெற்று வட்டாரக் கல்வி அலுவலர் சார்ந்த ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சிப் பெற்ற (TET தாள் I மற்றும் தாள் II) சான்றின் உண்மைத்தன்மையை அறியும் பொருட்டு முதன்மைக் கல்வி அலுவலரால் பராமரிக்கப்படும் ஆசிரியர் தேர்வு வாரியப் பதிவேடு உறுதிசெய்த பின்பு தேர்ச்சி பெற்ற விவரத்தை சார்ந்த ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வட்டாரக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி