ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் மோசடி விஏஓ, ஆர்ஐயிடம் விசாரணை. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2013

ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் மோசடி விஏஓ, ஆர்ஐயிடம் விசாரணை.

தர்மபுரியில் ஆசிரியர் தகுதி தேர்வு வினாத்தாள் மோசடி தொடர்பாக பென்னாகரத்தை சேர்ந்த விஏஓ, ஆர்ஐயிடம் விசாரணை நடக்கிறது.தமிழகத்தில் 17,18ம் தேதிகளில் ஆசிரியர் தகுதிதேர்வு நடந்தது. தர்மபுரியில் தேர்வு வினாத்தாள் கொடுப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக, டாஸ்மாக் ஊழியர் 2 பேர் உட்பட இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இதன் பின்னணி குறித்து முழுமையாக விசாரணை நடத்த எஸ்பி அஸ்ரா கார்க் உத்தரவிட்டுள்ளார்.இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ஒருவரது செல்போனுக்கு அடிக்கடி இரண்டு நபர்கள் பேசியது தனிப்படை போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து முக்கிய நபரின் செல்போனை தனிப்படை போலீசார் ஆய்வு செய்தனர். அந்த செல்போனில் வந்த எண்களை வைத்து விசாரணை மேற்கொண்ட போது அந்த எண்களுக்குரிய செல்போன் பென்னாகரத்தை சேர்ந்த வருவாய் ஆய்வாளர் மற்றும் அப்பகுதி கிராம நிர்வாக அலுவலரின் எண்கள் என தெரியவந்தது. இருவரின் எண்களுக்கும் ஏற்கனவே குரூப்&2 தேர்வில் தேர்ச்சி பெற்று தற்போது போலி வினாத்தாள் விவகாரத்தில் சிக்கி கைதாகியுள்ள இளையராஜாவின் செல்போனில் இருந்து பேசப்பட்டுள்ளது.நேற்று முழுவதும் கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் ஆய்வாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொடர்பு உறுதி செய்யப்பட்டால் கைது செய்ய வாய்ப்புள்ளதாக போலீ சார் தெரிவித்தனர். போலி கேள்வித்தாள் மோசடியில் சிக்கியுள்ள இளையராஜாவை மீண்டும் காவலில் எடுத்து விசாரிக்கபோலீ சார் திட்டமிட்டுள்ளனர்.

பயிற்சி மையங்களில் விசாரணை:

கடந்தாண்டு நடந்த தேர்வில் தர்மபுரி மாவட்டத்தில் அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். முன் கூட்டியே ரகசியமாக கேள்வித்தாள் சப்ளை செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்தாண்டும் பயிற்சி கொடுத்த மையங்களின் மாதிரி தேர்வு வினாத்தாளும், தற்போது நடத்தப்பட்ட தகுதி தேர்வு வினாத்தாளிலும் பெரும்பாலான கேள்விகள் ஒரே மாதிரியாக இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்தும் விசாரிக்கப்படுகிறது.

நன்றி : தினகரன்

1 comment:

  1. 120 questions TET la vantha questionsea vanthuruku nu Darmaburi police told. .
    ithu poli question na TRB ?

    Nadanthathu yeanna ?



    இதற்காகத்தான் டி.ஆர் பி 7
    சதவீதம்
    தேர்ச்சி எதிர்பார்க்கிறோம்
    என்றதோ

    VEALAIYAI VITTO,
    KUDUMPATHAI MARANTHU,
    KADINAMAAGA ULAITHAVARGALUKU

    NAMBIKKAI THOROGAM SEITHATHU YAAR ?

    KADINAMAAGA ULAITHAVARGALAI MUTTAALAAKKI VITTAARGAL.

    VAALGA JANA {PANA} NAAYAGAM.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி