அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2013

அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி!


சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைகழக ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு நவம்பர் மாதம் சம்பளத்துடன் மத்திய, மாநில அரசுகள் அறிவித்த 10 சதவீத அகவிலைப்படி வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளது.அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்
நிதிநெருக்கடி மற்றும் நிதிமுறைகேடு காரணமாக பல்கலைக்கழக ஆசிரியர், ஊழியர் கூட்டமைப்பினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்புபோராட்டம் விளைவாக தமிழகஅரசு 2 குழுக்களை அனுப்பி விசாரணை மேற்கொண்டு அக்குழு 11 பிரிவுகளின் கீழ் முறைகேடுகள் நடந்துள்ளதாக அரசுக்கு அறிக்கை சமர்பித்தது. பின்னர் தமிழகஅரசால் ஷிவ்தாஸ்மீனா ஐஏஎஸ் பல்கலைக்கழக நிர்வாகியாக கடந்த ஏப்.5-ம் தேதி நியமனம் செய்யப்பட்டு, அவர் உடனடியாக பொறுப்பேற்று பல்வேறு சீரமைப்பு பணிகளையும், சிக்கன நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் கடந்த மாதம் அரசு அறிவித்த 10 சதவீத அகவிலைப்படி உயர்வு அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியினால் உடனடியாக வழங்கப்படவில்லை. இந்நிலையில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியர்-ஊழியர் கூட்டமைப்பினர் பல்கலைக்கழக நிர்வாகி ஷிவ்தாஸ்மீனாவை சந்தித்து அகவிலைப்படி வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். அவர்களது கோரிக்கையை ஏற்று நவம்பர் மாத சம்பளத்துடன் 10% அகவிலைப்படி சேர்த்து வழங்க பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி