30 நிமிடங்களில், 10 திரைப்படங்களை பதிவிறக்கி பார்க்கும் வசதி: '4ஜி' மொபைல் சேவை அறிமுகம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 15, 2014

30 நிமிடங்களில், 10 திரைப்படங்களை பதிவிறக்கி பார்க்கும் வசதி: '4ஜி' மொபைல் சேவை அறிமுகம்.


பார்தி ஏர்டெல் நிறுவனம், இந்தியாவில் முதன் முதலாக, 4ஜி மொபைல் போன் சேவையை, பெங்களூருவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்: மிகத் துல்லியமான, தடங்கலற்ற வீடியோ காட்சிகளை காண உதவும், 4ஜி தொழில்நுட்பத்திலான மொபைல்சேவை, பெங்களூருவில் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஆப்பிள் ஐபோன் 5 எஸ் மற்றும் 5சி போன்களை பயன்படுத்துவோர், 3ஜி சேவைக்கான கட்டணத்திலேயே, 4ஜி சேவையை பெறலாம்.இதற்கு, வேறு திட்டத்திற்கு மாறத் தேவையில்லை. தற்போதுள்ள, 'சிம்' கார்டை மட்டும், மாற்றிக் கொண்டால் போதும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில், எந்த இடத்திலும், அதிவேகமான இணையதள வசதியை பெறுவதற்கு, 4ஜி தொழில்நுட்பம் உதவுகிறது.

குறிப்பாக, 30 நிமிடங்களில், 10 திரைப்படங்களை பதிவிறக்கி பார்க்கும் வசதியை, ஐபோன் உரிமையாளர்கள் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. பார்தி ஏர்டெல் நிறுவனம், ஏற்கெனவே, கடந்த 2012ம் ஆண்டு, கோல்கட்டாவில், டி.டீஎல்.டி.இ., தொழில்நுட்பத்திலான, 4ஜி சேவையை துவக்கியது. தற்போது, இந்தியாவில் பரவலாக பயன்தரக்கூடிய, 4ஜி தொழில்நுட்பத்தில் மொபைல் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள் ளது. விரைவில், முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமமும், நாடு முழுவதும், 4ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி