சட்டப்பேரவையில் இன்று விதி 110-ன் கீழ் அவர் வெளியிட்ட தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவிப்புகளின் விவரம்:
" "யாதும் ஊரே யாவருங் கேளிர்" என்ற புறநானூற்று வரிகளுக்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில், அறிவியல் யுகத்தில் அளப்பரிய வளர்ச்சியினை பெற்று இருக்கின்ற தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் பொதுமக்களுக்கான சேவைகளை விரைந்து வழங்கி வருகின்ற எனது தலைமையிலான அரசு, அதனை மேலும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முனைப்புடன் எடுத்து வருகிறது.
அந்த வகையில், நடப்பு ஆண்டில் கீழ்க்காணும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த அறிவிப்புகளை இந்த மாமன்றத்தில் அறிவிப்பதில் நான் மட்டற்ற மகிழ்ச்சிஅடைகிறேன்.
தமிழ்நாடு மாநில தரவு மையத்தின் நிலையை உயர்த்த...
தமிழ்நாடு மாநில தரவு மையம் (Tamil Nadu State Data Centre) தற்போது வணிகவரித் துறை, தமிழ்நாடு சுகாதாரத் திட்டம், சென்னை மாநகராட்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை, மெட்ரோ ரயில் திட்டம் உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்ட அரசுத் துறைகள் மற்றும் திட்டங்களின் கணினி சார்ந்த தேவைகளை வழங்கி வருகிறது.
இன்னும் பல அரசுத் துறைகள் தங்களது தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை அதிக அளவில் பொதுமக்களுக்கு அளித்திட முனைந்து வரும் இத்தருணத்தில், தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் தற்போதுள்ள உட்கட்டமைப்புவசதிகள் இத்தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. அரசுத் துறைகளின் அதிகரித்து வரும் தகவல் உட்கட்டமைப்பு தேவைகளை கருத்தில் கொண்டு, 5,000 சதுர அடி பரப்பளவில் புதிய கட்டடம் ஒன்று கட்டி, அதில் 40 அடுக்குகளை, Racksஅமைத்து 40 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு மாநில தரவு மையத்தின் நிலை உயர்த்தப்படும்.
ரூ.5 கோடியில் பேரிடர் தரவு மீட்பு மையம்
மின்ஆளுமைக்கான தகவல் தொழில்நுட்ப சேவைகளை தடையில்லாமல் வழங்குதல் அவசியமான ஒன்றாகும். ஆனால், இயற்கை சீற்றங்களான பூகம்பம், வெள்ளம் போன்றவை தரவு மைய பாதுகாப்பிற்கு சவாலாக உள்ளன. எனவே, இச்சேவைகளுக்கான தரவுகளை பேரிடர் மீட்பு மையம் தவிர மாநகரில் உள்ள வேறு ஒரு இடத்திலும் நகல் ஏற்றுவது அவசியமாகும். அரசின் மின்னாளுமை சேவைகளுக்கான தரவுகளை, மாநில தரவு மையத்திலிருந்து உடனுக்குடன் மற்றொரு இடத்தில் நகல் ஏற்றம் செய்யும் பொருட்டு, 1,250 சதுர அடி பரப்பளவில் ஒரு பேரிடர் தரவு மீட்பு மையம், அதாவது Near Line Disaster Recovery Centre 5 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
ரூ.1 கோடியில் மின்னஞ்சல் தொகுப்பு
தமிழக அரசு "tn.gov.in" என்ற இணைய வரம்பில், Domain Name-ல் அலுவல்சார் தொடர்புக்கான மின்அஞ்சல் முகவரிகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இணைய பாதுகாப்பில் உள்ள சிக்கல்கள் மற்றும் அரசு துறை தகவல்களின் ரகசியத் தன்மை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அரசுத் துறைகள் மற்றும் அரசு துறை அலுவலர்களின் அலுவல் சார்ந்த மின்னஞ்சல் முகவரிகளையும், மின்னஞ்சல்களையும் நிர்வகிக்க ஒரு திடமான, கட்டுறுதியான மின்னஞ்சல் தொகுப்பினை தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் செயல்படுத்துவது அவசியமாகிறது. சிறந்த, விரைவான, பாதுகாப்பான மற்றும் செயல்திறன் கொண்ட மின்னஞ்சல் தொடர்பினை பல்வேறு இயங்கு தள உதவியுடன் அளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் மின்னஞ்சல் தொகுப்பு ஒன்று 1 கோடி ரூபாய் செலவில் தமிழ்நாடு மாநில தரவு மையத்தில் செயல்படுத்தப்படும்.
இலவச மடிக்கணியை சிறந்த முறையில் பயன்படுத்த...
தமிழ்நாடு முழுவதும், இதுவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட மடிக்கணினிகள் மாணவ, மாணவியருக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளன. இம்மடிக்கணினிகளை சிறந்த முறையில் உபயோகப்படுத்துவதற்கான தகவல் தொழில்நுட்ப வளங்களை குறைந்த கட்டணத்தில் வழங்குவது அவசியமாகிறது. இளைஞர்களின் தொழில் முனையும் திறனை மேம்படுத்தும் வகையிலும், அவர்களின் படைப்பாற்றலை ஊக்குவிக்கும் வகையிலும், மாணவர்கள் மற்றும் இளம் தொழில் முனைவோர்களுக்கான மேகக் கணினி சார்ந்த சேவைகள், அதாவது Cloud Services மற்றும் இணையப் பதிவேற்ற சேவைகள், அதாவது Web-hosting Services ஆகியவற்றை குறைந்த கட்டணத்தில் வழங்கும் திட்டம் 50 லட்சம் ரூபாய் செலவில் செயல்படுத்தப்படும்.
இணையவழி களஞ்சியம்
உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்கள், வல்லுநர்கள், மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் ஒருங்கிணைந்து இணைய வழி பங்காற்றி தகவல்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில், தமிழர், தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தின் சாதனைகளை உள்ளடக்கிய தமிழ் மொழி, கலை மற்றும் பண்பாட்டுக்கான விரிவான இணையவழி களஞ்சியம் ஒன்று தமிழ் இணையக் கல்விக் கழகத்தினால் உருவாக்கப்படும். முதற்கட்டமாக இதற்கு 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.
அரசு கேபிள் டிவி மூலம் இன்டர்நெட் சேவை
தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனம், உயர் தர கேபிள் டிவி சேவையினை உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக பொதுமக்களுக்கு மிகக் குறைந்த மாத சந்தா தொகையான 70 ரூபாய்க்கு வழங்கி வருகிறது. அரசு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் வாயிலாக மாநிலம் முழுவதும் அதிவேக அகண்ட அலைவரிசை சேவைகள், அதாவது Broadband Services மற்றும் இதர இணையதள சேவைகள், அதாவது Internet Services ஆகியவற்றையும் குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டி.வி. இனி வழங்கும். அகண்ட அலைவரிசை உரிமங்கள் பெற்று உள்ளவர்களுடன் இணைந்து வழங்கப்படும்.
எனது தலைமையிலான அரசின் மேற்காணும் நடவடிக்கைகள், தகவல் தொழில்நுட்பத்தின் கூடுதல் பயனை பொதுமக்களும், அரசுத் துறைகளும் அடைய வழிவகுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.
நண்பர்களுக்கு வணக்கம் இன்று நான் இடைநிலை ஆசிரியர் பணிக்கான வெய்ட்டேஜ் பட்டியலில் தமிழ் வழிக்கான திருத்தம் கேட்டு சென்றிருந்தேன் காலை 10 மணியளவில் உள்ளே சென்று 5 தே நிமிட நேரத்தில் அனைத்து பணிகளையும் முடித்துக்கொண்டு திரும்பிவிட்டேன்..
ReplyDeleteசேலம் சரிபார்ப்பு மையத்தில் தவறாக பிழையுடன் வந்த வெய்ட்டேஜ் பட்டியல் இரண்டு நகல்கள் கேட்டனர்..
தமிழ்வழி சன்றிதலின் நகல் மட்டும் ஒன்று கேட்டனர் .. உடனடியாக சான்றிதல் திருத்ததிற்க்கான நுழைவு சீட்டு எண்ணை குறித்துக்கொண்டு ஒரு தமிழ்வழி சான்றிதல் நகலுடன் ஒரு வெய்ட்டேஜ் பட்டியலை பெற்றுக்கொண்டு என்னிடம் ஒரு பட்டியலை கொடுத்தனர்..
(இரண்டிலும் தமிழ் வழியில் NO என்று குறிப்பிட்டிருந்ததை YES என்று திருத்தம் செய்து கையொப்பமிட்டு ஒன்றை அலுவலக கோப்புக்காகவும் மற்றொன்றை என்னிடமும் கொடுத்தனர் )
thank you sir. congrats for ur bt selection.சான்றிதல் திருத்ததிற்க்கான நுழைவு சீட்டு எண்ணை What is this sir? if they are giving any no order?
Delete13texxxxxxxxxxxx பதிவு எண்...
DeleteThanks for ur quick reply
DeleteSri sir Congratulations for selected in bt list.when will you relieve from your school.
Deleteகலந்தாய்வு எப்போது ஸ்ரீசார்.
Deleteசார் அடுத்த பள்ளியில் சேர்வதற்கு முன்தினம் ...
Deleteஇரண்டாம் வினாவிற்கு. பதில் விரைவில்
Deleteவிமர்சனம்த்தில் சிக்காமல் தப்பிவிடுகிறீர் அதனால் உமது தனித்தன்மை கண்டறிவது சற்று சிரமமாக உள்ளதூ.
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThe candidates who passed in both papers..only selected for B.T ASSISTANT......their names will not take place in paper 1 selection list.....IT TAKES PLACE ONLY IN THE RESULTS...NOT IN THE PROVISIONAL LIST......
ReplyDeleteமிகவும் தவறான ஒரு தகவல் நண்பரே.. சென்ற ஆண்டே எனது நண்பர் BA(CA) ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் அந்த படிப்பு அப்போது தகுதியனதில்லை என்று நிராகரிக்கப்பட்டது.. அனால் அவருக்கு இடைநிலை ஆசிரியர் இடம் வழங்கப்பட்டது..
Deleteஅது மட்டுமில்லாமல் சென்ற ஆண்டு இரண்டு தேர்வுகளுக்கும் ஒரே பதிவு எண் அதனால் அவர்களே நீக்கிவிட்டனர்.. அனால் இந்த முறை இருவேறு பதிவு எண்கள்.. இப்போது எப்படி இது சாத்தியம்...
Sri sir pls tell us ur email id
DeleteSRI SIR, MY FRIEND IS PASSED IN 2012 TET. HIS WTG IS 63.4 & SC. WILL HE GEY JOB SIR? KINDLY REPLY ME SIR...
Deleteஅருண் சார் மன்னிக்கவும் இது பற்றி ஏதும் தெரியவில்லை....
Deletessrionlyforu@gmail.com
DeleteOK SIR THANK YOU.
Deleteநான் தகுதி தேர்வில் 104 மதிப்பெண் பெற்றும் எனக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது. என்ன காரணம்?? நான் சிறந்த ஆசிரியர் இல்லை இல்லையா? காரணம் வெயிட்டேஜ் முறை இந்த முறை தொடர்ந்தால் இனி நமக்கு எப்போதும் வேலை கிடைக்காது.
Deleteபாதிக்கப்பட்ட நாம் அனைவரும் ஒன்றினைவோம். போராடுவோம்
CBE. 9843311339
9442186176
9003540800
sir my wife tet II la 94 mark and weightage 59.76 geography ,,, vacany irunthum not within cutoff nu solli select agaala why ? my mail id vijayanvenkatraman@gmail.com
DeleteSri sir second list iruka sir paper 2 ku
ReplyDeletekalai mam, I called trb today 2.30pm. he asked 2 nd list published for 10 days. (athi thiravidar, samukanalathurai, nakaratchi, manakarathi pallikalin vacant) so pray God
ReplyDeleteKumaraguru sir rompa thanks
Deletegood chief minister..., welcome most
ReplyDeleteSecond list உண்டு.கவலைப்படவேண்டாம்
ReplyDeletegood chief minister welcome most
ReplyDeletePaper. 1 2 சேர்த்தான் போஸ்ட்டிங் போடுவார்களா ஸ்ரீ
ReplyDeleteதிரு மணியரசன் சர்ச்சைக்குரிய ஆர்ட்டிக்கில் எழுதுவாரே என்ன ஆயிற்றூ.
ReplyDeleteManiyarasen bilated wishes to you sir.
ReplyDeletepavi madam please tell me...please..sumar evlo vacancy second list la irukkum..for english
ReplyDeletesecond list kandippa varuma..madam
ReplyDeleteTamil posting irukuma sir pls
ReplyDeletekalai mam, you're Tamil major? your weightage? namathu Tamil thuraikku 300 idangal varai kidaikka vaippundu. don't worry madam.please reply
ReplyDeletekumarakurusr nejamave 2nd list unduma sir athla chem kku vaccant kooduma sir
ReplyDeleteplease reply sir
ReplyDeleteswetha mam, kandippaka 2nd list varum intha seithi trb vattaram sonnathu. che vacant pttri no idea, but vacant undu.
ReplyDelete