கிராம சுகாதார செவிலியர் பதவிக்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 11, 2015

கிராம சுகாதார செவிலியர் பதவிக்கான பதிவு மூப்பு பட்டியல் வெளியீடு

விழுப்புரம் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் கிராம சுகாதார செவிலியர் காலிப் பணியிடத்துக்காக பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டது. இப் பணி கோரி பதிவு செய்துள்ளவர்கள் தங்கள் பதிவு விவரங்களை சரி பார்த்துக் கொள்ளலாம்.இது குறித்து மாவட்ட ஆட்சியர் எம்.லட்சுமி வெளியிட்ட அறிக்கை:


தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 1819 கிராம சுகாதார செவிலியர் காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப் பணியிடத்துக்கு மல்டி பர்ப்பஸ் ஹெல்த் ஒர்க்கர், அல்லது மிட்வைப்ரி டிப்ளமோ, ஹெல்த் விசிட்டர்ஸ், ஏ.என்.எம் டிப்ளமோ தகுதி பெற்று தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு பெற்றிருப்பவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இவர்களுக்கு வயது வரம்பு ஜூலை 1-ம் தேதி.


இவர்களில் அனைத்து பிரிவினருக்கும்40 வயதுக்குள் இருக்க வேண்டும். இப் பணிக் காலியிடத்துக்கு மாநில அளவு பதிவு மூப்பில் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளதால் தகுதியுள்ள இந்த அலுவலக பதிவுதாரர்கள் தங்களது கல்வித் தகுதியினை உறுதிப்படுத்திக் கொள்ளும் பொருட்டு அனைத்து அசல் கல்விச் சான்றுகளுடன் செப்டம்பர் 15-ம் தேதிக்குள் விழுப்புரம்மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக உதவி இயக்குநரை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி