‘டான்செட்’ தேர்வுக்கு ஜன.7 முதல் விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 28, 2019

‘டான்செட்’ தேர்வுக்கு ஜன.7 முதல் விண்ணப்பிக்கலாம்


எம்.இ., எம்பிஏ உள்ளிட்ட முது நிலை படிப்புகளில் சேர்வதற்கான டான்செட் தேர்வுக்கு ஜனவரி 7-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி, தனியார் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் உள்ள எம்.இ., எம்.டெக்., எம்.ஆர்க்., எம்.பிளான், எம்பிஏ, எம்சிஏ போன்ற முதுநிலை படிப்புகளில் சேர தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் (டான்செட்) தேர்ச்சி பெற வேண்டும்.

2020-ம் ஆண்டுக்கான...

இந்த நிலையில், 2020-ம் ஆண் டுக்கான டான்செட் தேர்வு அறி விப்பை அண்ணா பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ளது. அதன் படி எம்சிஏ, எம்பிஏ படிப்புகளுக்கு பிப்ரவரி 29-ம் தேதி, எம்.இ., எம்.ஆர்க்., எம்.பிளான் படிப்புகளுக்கு மார்ச் 1-ம் தேதி தேர்வு நடத்தப்பட உள்ளது.

https://www.annauniv.edu இணையதளத்தில் இதற்கான விண்ணப்ப பதிவு ஜனவரி 7 முதல் 31-ம் தேதி வரை நடைபெறும்.தேர்வுக் கட்டணம் ரூ.600. எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் ரூ.300 செலுத்தினால் போதும். கல்லூரிகளில் தற்போது இறுதி ஆண்டு படிக்கும் மாணவர் களும் இத்தேர்வுக்கு விண்ணப் பிக்கலாம். மேலும் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி