
கொல்கத்தா ஐ.ஐ.எம். நிறுவனத்தில் 2020ம் ஆண்டில் படிப்பை நிறைவு செய்ய உள்ள 439 மாணவர்களுக்கு 136 தொழில் நிறுவனங்களில் இருந்து மொத்தம் 492 வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளன. சிறந்த முதல் 10 சதவீத மாணவர்கள் 54.5 லட்சம் ரூபாய் ஊதியத்திற்கு வேலை பெற்றுள்ளனர்.
வேலை வாய்ப்பை அளித்த நிறுவனங்களில் மைக்ரோசாப்ட், கூகுள், சேல்ஸ்போர்ஸ், அமேசான், பிளிப்கார்ட், உடான், இ.எக்ஸ்.எல். சர்வீஸ், அமெரிக்கன் எக்ஸ்பிரஸ், எச்.சி.எல்., யுனிடெட் ஹெல்த் குரூப், மாஸ்டர் கார்டு ஆகியவை குறிப்பிடத்தக்கது. இத்தகைய வேலை வாய்ப்பை பெற்றதன் மூலம், கொல்கத்தா ஐ.ஐ.எம்., புதிய சாதனையை படைத்துள்ளது.
indian brain exported to foreign for high rates
ReplyDelete