கொரோனா வைரஸ் - விழிப்புணர்வு செய்தி - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு. - kalviseithi

Mar 4, 2020

கொரோனா வைரஸ் - விழிப்புணர்வு செய்தி - மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியீடு.


• கொரோனா வைரஸ் ( nCov - 2019 )

கொரோனா வைரஸ் என்பது மனிதர்களுக்கு சளி , இருமல் , காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறல் ஆகியவற்றை ஏற்படுத்தக் கூடிய ஒருவகை வைரஸ் கிருமியாகும் . சீனாவின் வூகான் நகரத்தில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது . இது விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது .

நோயின் அறிகுறிகள் :

- காய்ச்சல் , இருமல் மற்றும் சளி - உடல் சோர்வு - ஒரு சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்படும் .

கொரோனாவைரஸ் நோய் பரவும் விதம் :

நோய் அறிகுறிகள் கண்ட நபர் இருமும் போதும் , தும்மும் போதும் , வெளிப்படும் நீர்த் திவலைகள் மூலம் நேரடியாக பரவுகிறது . மேலும் இருமல் மற்றும் தும்பல் மூலம் வெளிப்படும் கிருமிகளை உடைய நீர்த் திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்பொழுது கைகள் மூலமாகவும் பரவுகிறது .

நோய் தடுப்பு நடவடிக்கைகள் :

தினமும் 10 முதல் 15 முறை சோப்பு போட்டு , நன்கு தேய்த்து கழுவ வேண்டும் . இருமும் போதும் தும்மும் போதும் வாய் மற்றும் மூக்கை கை குட்டை கொண்டு மூடி கொள்ள வேண்டும் . சிகிச்சை தரும் அனைத்து மருத்துவமனைகளிலும் கிருமி நாசினி கொண்டு சுத்தமாக துடைத்து பராமரித்தல் வேண்டும் .

சிகிச்சைகள்

 சளி , இருமல் மற்றும் காய்ச்சல் , போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அனுகவும் .  இளநீர் , ஓ . ஆர் . எஸ் , கஞ்சி போன்ற நீர்ச்சத்து மிகுந்த ஆகாரங்களை பருகுதல் வேண்டும் .


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி