நிவர் புயல் எதிரொலி பள்ளிகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு. - kalviseithi

Nov 23, 2020

நிவர் புயல் எதிரொலி பள்ளிகளை தயார் நிலையில் வைத்திருக்க உத்தரவு.

25.11.2020 நிவர் புயல் எதிரொலி பள்ளி வகுப்பறைகளை பயன்படுத்துவதற்கு ஏதுவாக பள்ளியின் சாவியை பள்ளி அருகில் இருக்கும் முக்கிய உள்ளூர் பிரமுகர்களிடம் ஒப்படைக்க உத்தரவு.



25.11.2020 அன்று அறிவித்துள்ள நிவர் புயல் மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக ( பேரிடர் காயங்களில் ) பள்ளி வகுப்பறைகளை பயன்படுத்துவதற்காக உள்ளூர் பிரமுகர்கள் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் , எஸ்.எம்.சி பொறுப்பாளர்கள் , மராட்சி மன்றத் தலைவர் மற்றும் அரசு அதிகாரிகள் ஆகியோர் கேட்கும் போது உடனடியாக வழங்குவதற்கு ஏதுவாக பள்ளியின் சாவியை உள்ளூர் பிரமுகர்கள் அல்லது உள்ளூர் ஆசிரியர்கள் எவரேனும் ஒருவரிடம் ஒப்படைத்து வைக்குமாறு அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. 


மேலும் , பேரிடர் காலங்களில் மக்கள் தங்குவதற்கு அடிப்படை வசதியான குடிநீர் வாதி ( குடிநீர் தொட்டியினை நிரப்பிவைத்தல் ) , கழிவறைகள் ( சுத்தம் செய்தல் ) போன்றவற்றினை தயார் நிலையில் வைத்திடவும் , துப்புரவு பணியாளர்களைக்கொண்டு பள்ளியினை தூய்மைப்படுத்திடவும் தெரிவிக்கப்படுகிறது. பேரிடர் காலங்களில் தேவை ஏற்படின் NSS மாணவர்களை பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அனைத்து வகைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது - CEO திருவண்ணாமலை மாவட்டம்.

1 comment:

  1. இப்பொது மட்டும் நிவர் புயல் என்ற பெயரில் மாணவர்களை பயன்படுத்தலாம்

    இப்போதெல்லாம் மாணவர்களை கொரோனா பாதிக்காது

    9 T0 12 பள்ளி மாணவர்களுக்கு பள்ளி திறந்தால் கொரோனா வந்து விடும்

    நல்ல நாடு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி