தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு – அரசு பள்ளி மாணவர்கள் குழப்பம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 14, 2021

தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வு – அரசு பள்ளி மாணவர்கள் குழப்பம்!

 

புதுச்சேரி தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் காலாண்டு தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு தேர்வு குறித்த எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை.


காலாண்டு தேர்வு:


புதுச்சேரியில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்றது. புதுச்சேரி அரசு நோய் பரவலை தடுக்க பல்வேறு பணிகளை மேற்கொண்டு தொற்று பரவலை குறைத்துள்ளது. மற்ற மாநிலங்களில் தொடர்ச்சியாக அடுத்தடுத்து பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் புதுச்சேரியலும் பள்ளிகள் திறப்பு குறித்து கல்வித்துறை அமைச்சர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன் பிறகு தமிழகத்தை போலவே செப்டம்பர் 1ம் தேதி 9 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.


அதன்படி கடந்த 1 ஆம் தேதி முதல் 9, 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திங்கள், புதன், வெள்ளி ஆகிய கிழமைகளிலும், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளிலும் சுழற்சி முறையில் வகுப்புகள் மதியும் 1 மணி வரை நடைபெற்று வருகிறது. மேலும் பள்ளிக்கு வராத மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறுகிறது. இந்த நிலையில் புதுச்சேரி தனியார் பள்ளிகளில் இம்மாதம் இறுதிக்குள் காலாண்டு தேர்வினை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி