மாணவர்களுக்கு அறிவியல் , கணிதத்தில் கேள்வித்திறனை அதிகரிக்க புதிய திட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 28, 2022

மாணவர்களுக்கு அறிவியல் , கணிதத்தில் கேள்வித்திறனை அதிகரிக்க புதிய திட்டம்

6 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மத் தியில் அறிவியல் மனப் பான்மையையும் , கணி தம் குறித்த அறிவையும் வளர்க்கவும் , அப்பாடங்களில் கேள்வித்திறனை அதிகரிக்கவும் ஆசிரியர்களுக்கான புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளதுடன் , அதற்கான படிநிலைகளை பின்பற்ற அறிவுறுத்தல்களை முதன்மை கல்வி அலுவலர்கள் மூலம் வழங்கியுள்ளது.

 தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வியில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கான பல் வேறு முயற்சிகளை பள்ளிக்கல்வித்துறை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அறிவியலும் , கணிதமும் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு புதிய திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

 குழந்தைகளுக்கு அறி வியல் மற்றும் கணிதம் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களும் பின்னாளில் ஒரு குழந்தை என்னவாக போகிறது ? என்பதற்கான அடித்தளத்தை அமைக்க முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

 மேலும் , அறிவியலையும் கணிதத்தையும் ஒரு குழந்தை சரியான முறையில் புரிந்துகொண்டால் , அதன் கேள்வி கேட்கும் திறன் அதிகமாகும்.

இப்படி குழந்தைகளின் சிந்தனைகளையும் , கேள்விகேட்கும் திறனையும் வளர்த்தெடுக்கும் பணியிலுள்ள ஆசிரியர்களுக்கு பின்பற்ற வேண்டிய படிநிலைகள் அறிவிப்புடன் வழங்கப்பட்டுள்ளது.

 இந்த அறிவிப்பை தெரிந்துக்கொள்ள வழங் கப்பட்டுள்ள படிநிலை களை பின்பற்றி எமிஸ் தளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.

ஆகவே , இதுதொடர்பான அறிவுறுத்தல்களை விளக்கமாக ஒவ்வொரு பள்ளிக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி