ஆசிரியை உமா மகேஸ்வரி சஸ்பெண்ட் - இதுதான் காரணம்!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 8, 2024

ஆசிரியை உமா மகேஸ்வரி சஸ்பெண்ட் - இதுதான் காரணம்!!

 

அரசுக்கு எதிராக சமூகவலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்த பட்டதாரி ஆசிரியர் உமா மகேஸ்வரியை செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலர் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


செங்கல்பட்டு மாவட்டம், நெல்லிக்குப்பம் அரசுப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராக உமா மகேஸ்வரி என்பவர் பணியாற்றி வருகிறார். 


இவர் தனது முகநூல் பக்கத்தில், கல்வித்துறையில் நிகழும் குறைகளையும், மாணவர்களுக்கு தேவையான கல்வி முறை பற்றி தனது கட்டுரைகள் மூலம் பொதுசமூகத்திற்கு புரிதலை ஏற்படுத்துவதற்காக தொடர்ந்து எழுதி வருகிறார். ஆசிரியர் சங்கங்கள் மூலம் அரசுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.


இந்நிலையில், பள்ளிக்கல்வி குறித்து தொடர்பாக முகநூல் பக்கத்தில் சில கட்டுரைகளை எழுதி இருந்தார். இது அரசுக்கு எதிராக உள்ளதாக கூறி செங்கல்பட்டு மாவட்ட கல்வி அலுவலரிடம் புகார் அளிக்கப்பட்டது. 


இதையடுத்து, ஆசிரியர் உமா மகேஸ்வரியை சஸ்பெண்ட் செய்து செங்கல்பட்டு கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகளை மீறி கருத்துகளை பதிவிட்டு வந்ததால், இந்த நடவடிக்கை அவர் மீது எடுக்கப்பட்டுள்ளது.


“ஏழைக்குழந்தைகளின் கல்வி பாதிப்புகளையும், பொதுக்கல்வி முறையில் உள்ள சிக்கல்களையும் தீர்வுகளையும் குறித்து ஆசிரியர்கள் எழுதுவது குற்றசெயல் அல்ல. பொதுக்கல்விமுறையை பாதுகாக்கவும், சமகாலக்கல்வி முறையில் உள்ள குறைகளை சரிசெய்யவும் வலியுறுத்துவது ஆசிரியர்களின் ஜனநாயக கடமை. 


மாற்றுக்கருத்து கூறுவோரை அடக்குமுறை கையாளும் தமிழக அரசின் எதேச்சதிகார போக்காகவும், கருத்துரிமையை நசுக்கும் விதமாகவும் இந்த தற்காலிக பணிநீக்கம் உத்தரவு இருப்பதால் உமாமகேஸ்வரியை தற்காலிக பணி நீக்கத்தை தமிழ்நாடு அரசு ரத்து செய்ய வேண்டும்” என்று அவருக்கு ஆதரவாக சமூகவலைதள பக்கங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன.



7 comments:

  1. எல்லாம் நம் திராவிட மாடல் பக்கம் வரும் போது நாம் வட இந்தியா மாடல் பக்கம் செல்கிறோமா?

    ReplyDelete
  2. திராவிட மாடல் இது அல்ல.... சுய சிந்தனை கருத்துரிமை இவையே ஒரு உண்மையான ஆசிரியரின் அடையாளம் இவற்றையே தந்தை பெரியார் , அண்ணா , கலைஞர் இவர்கள் மக்களிடம் போதித்தது... இதை தடுத்தால் அது திராவிட மாடல் அல்ல... ஆரிய மாடல்.... ஸ்டாலின் அவர்களின் அரசை அதிகாரிகள் தவறாக வழி நடத்தப்படுகிறது.... சகோதரியே நீங்கள் சற்றும் தயங்காமல் உண்மையை இன்னும் வீரியத்துடன் வீசுங்கள்...

    ReplyDelete
    Replies
    1. அரசுக்கும், தாம் பணிச்செய்யும் துறைக்கும் கலங்கம் விலைவிப்பது சுய சிந்தனையா? கல்விப்பணி குழந்தைகள் முன்னேறத்துக்காக மட்டுமே ஒழிய தன்னை போராளியாக காட்டிக்கொள்வதற்கல்ல. இவரிடம் தவறில்லையெனில் நீதிமன்றம் செல்லலாம்.

      Delete
  3. ITHU DURATHISHTAMANATHU. NALLAVARGALUKKUM, NERMAI AANAVARGALIKKUM ARASANGA VELAIKALIL IDAM IRUKKATHU

    ReplyDelete
    Replies
    1. அரசு வேலையை துறந்துவிட்டு நல்லவராக, நல்லதுகளுக்காக போராடலாம்.

      Delete
  4. அவர் உண்மையே பேசுவதாக வைத்துக்கொண்டாலும், தான் பதவி வகிக்கும் துறைக்கும் அரசுக்கும் எதிரான கருத்துக்களை எப்படி பொதுவெளியில் கொண்டுச்செல்லமுடியும். அது ஒழுங்கீனம் தான். இவர் கருத்துக்களை துறை அதிகாரிகளுக்கே எழுதி நிவாரணம் பெற்றிருக்க வேண்டும்.

    ReplyDelete
  5. அரசு பொதுவெளியில் வாக்குறுதியை கொடுக்கிறது. மறைவாக கெடுக்கிறது. மானங்கெட்ட அரசு பதவி துறக்கலாம். நீ எதிர்கட்சியாக இருந்து இதைத்தானே சொன்னார். ஒன்றுக்கும் உதவாது அரசை. அதிகாரிகளை. நீதிபதி என்ற பெயரில் கொள்ளையடிப்பவர்களை விமர்சிக்க எல்லாருக்கும் உரிமை உண்டு. யோக்கியனாக வட. உனக்கு விமர்சனம் வராது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி