LMS இணைய வழி பயிற்சியானது 1- 12 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் 10.01.2025 க்குள் முடிக்க அறிவுறுத்தல் -- SCERT ( JD) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 17, 2024

LMS இணைய வழி பயிற்சியானது 1- 12 வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்கள் 10.01.2025 க்குள் முடிக்க அறிவுறுத்தல் -- SCERT ( JD)

 

2024 2025 ஆம் கல்வியாண்டில் சிறப்பு தேவையுடைய குழந்தைகளுக்கான உள்ளடக்கிய கல்வியின் மூலம் முறையான கல்வியை மேம்படுத்தும் நோக்கில் கட்டகம் உருவாக்கப்பட்டும் , அதனை மதிப்பீடு செய்தும் ( Assessment ) உள்ளடக்கிய கல்வி பற்றி ஆசிரியர்கள் அறிந்திடும் வகையில் LMS தளத்தின் மூலம் பதிவேற்றம் மேற்கொள்ளப்பட்டு , இணைய வழி வாயிலாக EMIS தளத்தின் வழியே 14.12.2024 முதல் அனைத்து மாவட்டங்களில் ஆசிரியர்கள் பயன்பெறும் வகையில் காணொலி மூலம் இபயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. 


மேற்படி இக்காணொலிப்பயிற்சியினை ஆசிரியர்கள் 10.01.2025 - க்குள் மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

 எனவே , மாநிலம் முழுவதும் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை கையாளும் அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களுக்கு LMS வழியாக பயிற்சி அளிக்கப்படும் நிலையில் , இப்பயிற்சியிணை உரிய காலத்தில் மேற்கொள்ள அறிவுறுத்திடுமாறும் , இப்பயிற்சி முடிவுற்ற பின்னர் முன்னேற்ற அறிக்கை விவரத்தினை இந்நிறுவன tnscertjd3@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி