ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் 10, 11, 12-ல் இடமாறுதல் கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2026

ஆதி திராவிடர் நலத்துறை பள்ளி ஆசிரியர்களுக்கு ஜூன் 10, 11, 12-ல் இடமாறுதல் கலந்தாய்வு

 

ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கான பொது இடமாறுதல் கலந்தாய்வு இணையவழியில் ஜூன் 10, 12 மற்றும் 13 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்: 2026-2027-ம் கல்வி ஆண்டில் ஆதி திராவிடர் நலப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் காப்பாளர்களுக்கு பொது இடமாறுதல் கலந்தாய்வை ஜூன் 10 முதல் 12-ம் தேதி வரை இணையவழியில் நடத்த ஆதி திராவிடர் நல ஆணையருக்கு அனுமதி அளித்து ஆணையிடப்படுகிறது.

கலந்தாய்வின்போது நிர்ணயிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும். பணி ஓய்வு, பணிநீக்கம் பதவி உயர்வு, மரணம் போன்ற காரணங்களினால் 31.5.2026 அன்றை நிலையில் ஏற்படும் புதிய பணியிடங்கள் மற்றும் நிர்வாக காரணங்களால் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு மட்டும் பொது மாறுதல்கள் செய்யப்பட வேண்டும்.

ஒரு ஆசிரியருக்கு மாறுதல் வழங்குவதற்காக எக்காரணம் கொண்டும் மற்றொரு ஆசிரியரை மாறுதல் செய்யக்கூடாது. கலந்தாய்வுக்கு 3 நாட்களுக்கு முன்னதாக காலியிடங்கள் பற்றிய முழு விவரமும் அனைத்து மாவட்ட ஆதிராவிடர் நல அலுவலகங்களின் தகவல் பலகையில் வெளியிடப்பட வேண்டும்.

மேலும் மாவட்ட தேசிய தகவல் மைய (நிக்) இணையதளத்திலும் வெளியிட வேண்டும். ஏற்கனவே இடமாறுதல் பெற்றவர்கள் மாறுதல் பெற்ற நாளில் இருந்து ஓராண்டு முடிந்த பின்னரே கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி