மருத்துவ படிப்புக்கான நீட் மறுதேர்வு: ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2026

மருத்துவ படிப்புக்கான நீட் மறுதேர்வு: ஹால் டிக்கெட் பதிவிறக்கம் செய்வதில் சிக்கல்

 

தொழில்​நுட்ப பிரச்​சினை​யால் நீட் மறு​தேர்​வுக்​கான ஹால் டிக்​கெட்டை பதி​விறக்​கம் செய்ய முடி​யாமல் மாணவர்​கள் கடும் சிரமத்​துக்கு உள்​ளா​னார்​கள். தொழில்​நுட்ப பிரச்​சினை சரிசெய்​யப்​பட்டு வரு​வ​தாக​வும், அனைத்து மாணவர்​களும் ஹால்​டிக்​கெட்டை பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம் என்​றும் தேசிய தேர்வு முகமை அறி​வித்​துள்​ளது.

தேர்வு ரத்து: மருத்​து​வம் மற்​றும் பல் மருத்​துவ படிப்பு மாணவர் சேர்க்​கைக்​காக நீட் (யுஜி) நுழைவுத்​தேர்வு நடத்​தப்​படு​கிறது அந்த வகை​யில், நடப்பு கல்வி ஆண்டு சேர்க்​கைக்​கான நீட் தேர்வு மே 3-ம் தேதி நடந்​தது. வினாத்​தாள் கசிந்​த​தால் அத்​தேர்வு ரத்​துசெய்​யப்​படு​வ​தாக​வும் மறு நீட் தேர்வு ஜூன் 21-ம் தேதி நடத்​தப்​படும் என்று தேசிய தேர்வு முகமை (என்​டிஏ) அறி​வித்​தது. இதைத்​தொடர்ந்து நீட் மறு​தேர்​வுக்​கான ஹால் டிக்​கெட்டை மாணவர்​கள் ஜூன் 15-ம் தேதி முதல் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலாம் என தெரி​வித்​தது.

நாடு முழுவதும்... அதன்​படி, நீட் தேர்வு மாணவர்​கள் தங்​களுக்​கான ஹால் டிக்​கெட்டை நேற்று என்​டிஏ இணை​யதளத்​தில் பதி​விறக்​கம் செய்ய முயன்​றனர். ஆனால், இணை​யதளத்​தில் ஏற்​பட்ட தொழில்​நுட்ப கோளாறு காரண​மாக மாணவர்​கள் ஹால்​டிக்​கெட்டை பதி​விறக்​கம் செய்​வ​தில் சிக்​கல் ஏற்​பட்​டது. இணை​யதளத்​தில் பக்​கம் திறக்​காதது, பதி​விறக்​கம் செய்​யும்​போது பாதி​யில் நின்​று​விடு​வது என பல்​வேறு பிரச்​சினை​களை நாடு முழு​வதும் மாணவர்​கள் எதிர்​கொண்​டனர்.

இதற்​கிடையே, என்​டிஏ வெளி​யிட்ட அறி​விப்​பில், நாடு முழு​வதும் இது​வரை 4 லட்​சம் மாணவர்​கள் ஹால்​டிக்​கெட்டை பதி​விறக்​கம் செய்​திருப்​ப​தாக​வும், விரை​வில் தொழில்​நுட்ப கோளாறு சரிசெய்​யப்​பட்டு அனைத்து மாணவர்​களும் ஹால் ​டிக்​கெட் பதி​விறக்​கம் செய்​து​கொள்​ளலா்ம் என உறு​தி​யளித்​துள்​ளது.

மன உளைச்சல்: வினாத்​தாள் கசிந்து தேர்வு ரத்​து, மறு​தேர்​வு, அதற்​கான ஹால்​ டிக்​கெட் பதி​விறக்​கம் செய்​வ​தில் சிக்​கல், மறு தேர்வு எழு​தாதவர்​களுக்கு கட்​ட​ணத்தை திருப்பி அளிப்​ப​தில் பிரச்​சினை என நீட் தேர்வு விவ​காரத்​தில் மாணவர்​கள் கடும்​ மனஉளைச்​சலுக்​கு ஆளாகி​யுள்​ளனர்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி