‘ஆயுஷ்’ படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க நாளை மறுநாள் கடைசி நாள் ஆகும். சித்தா, ஆயுர்வேத, யுனானி, ஓமியோபதி (பிஎஸ்எம்எஸ், பிஏஎம்எஸ், பியுஎம்எஸ், பிஎச்எம்எஸ்) பட்டப்படிப்புகளுக்கு 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பம் கடந்த 13-ம் தேதி www.tnayushselection.org என்ற சுகாதாரத்துறை இணையதளத்தில் தொடங்கியது.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும் இந்த 4 படிப்புகளுக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இதுவரை 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைன் விண்ணப்பம் ஜூலை 31-ம் தேதி மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.
அதேபோல், இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ பட்டப்படிப்புக்கு (பிஎன்ஒய்எஸ்) 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு www.tnayushselection.org என்ற இணையதளத்தில் விண்ணப்பிப்பது கடந்த 13-ம் தேதி தொடங்கியது.
இதற்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெறும். இந்த படிப்புக்கு இதுவரை 2,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதற்கும் 31-ம் தேதி மாலை 5 மணியுடன் விண்ணப்பம் நிறைவடைகிறது. இந்த படிப்புக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீடு கிடையாது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி