BE : கலந்தாய்வின்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை: கல்வி ஆலோசகர் அஸ்வின் விளக்கம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 29, 2026

BE : கலந்தாய்வின்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை: கல்வி ஆலோசகர் அஸ்வின் விளக்கம்

 

பொறி​யியல் கல்​லூரி பொதுக் கலந்​தாய்​வில் பங்​கேற்​பவர்​கள் கவனத்​தில் வைத்​திருக்க வேண்​டிய விஷ​யங்​கள் குறித்து கல்வி ஆலோ​சகர் அஸ்​வின் விளக்​கம் அளித்​துள்​ளார்.

அரசு மற்​றும் தனி​யார் சுயநிதி பொறி​யியல் கல்​லூரிகளில் சேர்வதற்​கான பொதுப் பிரிவு மற்​றும் சிறப்பு இட ஒதுக்​கீட்​டுக்​கான கலந்​தாய்வு ஜூலை 15-ம் தேதி முடிந்​துள்​ளது. ஜூலை 20 முதல் பொது கலந்​தாய்வு நடை​பெறுகிறது. இந்​நிலை​யில் மாணவர்​கள், பெற்​றோரின் பல்​வேறு சந்​தேகங்​களுக்கு கல்வி ஆலோ​சகர் அஸ்​வின் விளக்​கம் அளித்​தார். அதன் விவரம் வரு​மாறு:

கலந்​தாய்வு 3 கட்​ட​ங்களாக நடை​பெறுகிறது. முதல் கட்​டத்​தில் 171.33 கட்​ஆஃப் மதிப்பெண் இருப்​பவர்​களுக்கு நடை​பெற்​றது. இதற்கு கீழ் கட்​ஆஃப் உள்​ளவர்​களுக்கு 2 மற்றும் 3-ம் கட்​டங்​களில் கலந்​தாய்வு நடை​பெறும். ஆன்​லைன் கலந்​தாய்வு என்​ப​தால் மாணவர் அவர்​களின் இடத்​திலிருந்தே பிடித்த கல்​லூரி, பிடித்த துறையை தேர்வு செய்​ய​லாம்.

மாணவர்​கள் தங்​களின் கட்​ஆஃப் அடிப்​படை​யில் எந்தக் கல்​லூரி​யில், எந்த துறையை தேர்வு செய்ய வேண்​டும் என அறிந்து தேர்வு செய்​வது நல்​லது.

எனது முதல் விருப்​பம் இது, அது இல்​லை​யென்​றால் இந்த பிரி​வில் இந்தக் கல்​லூரி​யில் இடம் ஒதுக்​குங்​கள் என்று ஒரு மாணவர் எத்​தனை விருப்​பத்தை வேண்​டு​மா​னாலும் தெரிவிக்​கலாம்.

படித்து முடித்த பிறகு வேலை​வாய்ப்பு பற்​றி​யும் அப்​போது தெளி​வாக சிந்​திப்​பது முக்​கி​யம். இந்​தத் துறையை தேர்வு செய்து படித்​தால்​தான் நல்​லது, இந்த கல்​லூரி​தான் சிறந்​தது என்று யாராலும் கணித்து கூற முடி​யாது. எந்த துறை​யில் சேர்ந்து படித்​தா​லும் நன்​றாக புரிந்து படித்​தால் சிறப்​பான எதிர்​காலம் உள்​ளது என்​பது மாணவர்​கள் அறிந்​து​கொள்ள வேண்​டும். இவ்​வாறு அஸ்​வின் கூறி​னார்​.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி