10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 11, 2026

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது

தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. 4,219 மையங்களில் 9 லட்சத்து 9,002 பேர் தேர்வு எழுதுகின்றனர்.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் இந்த ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு இன்று தொடங்குகிறது. ஏப்.6-ம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ளன. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தேர்வுகள் நடைபெறுகின்றன.

மாநிலம் முழுவதும் 4,219 மையங்களில் 9 லட்சத்து 9,002 பேர் தேர்வு எழுதுகின்றனர். இதில் 12,467 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 82,806 மாணவர்கள், 25,801 தனித்தேர்வர்கள், 395 சிறை கைதிகளும் அடங்குவர்.

மேலும், மாற்றுத் திறனாளிகள், சிந்தனைத் திறன் குறைபாடு உடையவர்கள் உள்ளிட்ட 12,292 பேர் ‘ஸ்கிரைப்’ உதவியுடன் தேர்வு எழுதுகின்றனர். தேர்வுக்கான அறைக் கண்காணிப்பாளர் பணியில் 49,542 ஆசிரியர்கள் ஈடுபடுகின்றனர்.

முறைகேடுகளைத் தடுக்க 4,954 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர், வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் கண்காணிப்புக் குழுக்கள் உள்ளன.

தேர்வு குறித்த புகார், கருத்துகளை தெரிவிக்க தேர்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. 9498383075, 9498383076 ஆகிய எண்களிலோ dgequestionpaperqueries@gmail.com மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளலாம்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி