பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுகட்டமைப்பு: புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 24, 2026

பள்ளி மேலாண்மை குழுக்கள் மறுகட்டமைப்பு: புதிய உறுப்பினர்களை தேர்வு செய்ய உத்தரவு

அரசுப் பள்​ளி​களில் எஸ்​எம்சி பதவிக்​காலம் முடிவ​தால் புதிய உறுப்​பினர்​களை செப்​டம்​பர், அக்​டோபர் மாதங்​களில் தேர்வு செய்ய வேண்​டும் என பள்​ளிக்​கல்​வித் துறை உத்​தர​விட்​டுள்​ளது.

இதுகுறித்து பள்​ளிக்​கல்​வித் துறை செயலர் பி.சந்​தரமோகன் வெளி​யிட்ட அரசாணை: தமிழகத்​தில் அரசுப் பள்​ளி​களில் இயங்​கிவரும் பள்ளி மேலாண்​மைக் குழுக்​கள் (எஸ்​எம்​சி) கடந்த 2024-ம் ஆண்டு மறுகட்​டமைப்பு செய்​யப்​பட்​டது.

அதன்​படி, பெற்​றோர், ஆசிரியர்​கள், உள்​ளாட்​சிப் பிர​தி​நி​தி​கள் மற்​றும் முன்​னாள் மாணவர்​களை உள்​ளடக்​கிய 20 உறுப்​பினர்​கள் கொண்ட குழு​வாக எஸ்​எம்சி மாற்றி அமைக்​கப்​பட்டு சிறப்​பாக செயல்​பட்டு வரு​கிறது. அதில் கற்​றல், சேர்க்​கை, மேலாண்மை தொடர்​பாக தீர்​மானங்​கள் நிறைவேற்​றப்​பட்டு தொடர் நடவடிக்​கைகள் மேற்​கொள்​ளப்​படு​கின்​றன. ஏற்​கெனவே நியமிக்​கப்​பட்ட பள்ளி மேலாண்​மைக் குழு​வின் பதவிக்​காலம் இந்த மாதத்​துடன் நிறைவடைய உள்​ளது.

இதையடுத்து, 2026-28-ம் ஆண்​டு​களுக்​கான எஸ்​எம்சி குழு​வுக்கு புதிய உறுப்​பினர்​களை தேர்வு செய்​வதற்​கான நடை​முறை​கள் தற்​போது வெளி​யிடப்​பட்​டுள்​ளது. அதன்​படி, பள்ளி மேலாண்​மைக் குழு​வின் புதிய உறுப்​பினர்​களை செப்​டம்​பர், அக்​டோபர் மாதங்​களில் தேர்ந்​தெடுக்க வேண்​டும். இதற்​கான பெற்​றோர் விழிப்​புணர்​வுக் கூட்​டம் ஆகஸ்ட் 29-ம் தேதி நடத்​தப்பட வேண்​டும்.

அதைத் தொடர்ந்து எஸ்​எம்சி மறுகட்​டமைப்பு பணி​கள் தொடக்​கப் பள்​ளி​களில் செப்​டம்​பர் 12, 19-ம் தேதி​களி​லும், நடுநிலைப் பள்​ளி​களில் செப்​டம்​பர் 26-ம் தேதி​யும், உயர்​நிலை, மேல்​நிலைப் பள்​ளி​களில் அக்​டோபர் 10-ம் தேதி​யும் மேற்​கொள்ள திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இதற்​கான வழி​காட்​டு​தல்​களை பின்​பற்றி செயல்பட வேண்​டும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

1 comment:

  1. MPC TRB COACHING CENTRE, ERODE
    Contact: 9042071667
    ​UG TRB MATHEMATICS TEST BATCH 2026
    ​NEW TEST BATCH STARTS ON SEPTEMBER 6
    ​Category-Wise Fee Details
    ​Category 1 Coaching: ₹10,000
    ​Category 2 Coaching: ₹5,000
    ​Category 3 Coaching: ₹2,500
    ​Key Features
    ​Comprehensive Study Material
    ​Pre-Recorded Class Videos
    ​Test Schedule Until the Examination
    ​Brief Discussion Class After Each Test
    ​ADMISSION OPEN
    For Details Call: 9042071667

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி