4scroll

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

ஆசிரியர்கள் - PAPER NEWS

ANNOUNCEMENT

Jul 26, 2016

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் 2016-17:அனைத்து பதிவுகளின் தொகுப்பு.

Download 'TNNHIS-2016'

Dear friends,

Download 'TNNHIS2016' android app from playstore. It's very helpful in getting NHIS treatments, list of hospitals, list of dependents and their details. A must app that should be installed in every Govt. Employee's mobile..

User id example:NMK\01\SB435\NHIS16\123456
Password:Date of birth in dd/mm/yyyy format.

பள்ளிக் கல்வி - மேல்நிலைக் கல்வி- பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்குதல் - தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலை பணிகள் விதிகளில் , விதி 9 ஐ அமல்படுத்துதல் -சார்பு

PG TRB Physics - Question Bank (New)

தருமபுரி மாவட்டத்திற்கு ஆடி 18 ( ஆகஸ்ட்-02) ல் உள்ளூர் விடுமுறை

NURSING ADMISSION 2016 | 2016-2017 ஆம் வருட பி.எஸ்சி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பினை மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது .

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணி.

பாரதியார் பல்கலைக் கழகத்தில் பகுதி நேர - முழு நேர M.Phil / Ph.D பயில வாய்ப்பு .விரிவான தகவல்கள்.


Jul 25, 2016

FINANCE DEPT : July 15, 2016 Official Committee 2009 – Revision of Scales ofpay of employees and Teachers - Verification and confirmation of the appropriate scales of pay - Dir. Proc (15/07/2016)

TNPSC:உயர் நீதிமன்றத்தில் பணி நியமன அறிவிப்பு.

சென்னை உயர் நீதிமன்றத்தில் காலியாக உள்ள நேர்முக உதவியாளர், தட்டச்சர், ஆய்வா ளர், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் உள்ளிட்ட பதவிகளை நேரடியாக நிரப்புவதற்காக ஆகஸ்ட் 28-ம் தேதி எழுத்துத் தேர்வு நடத்தப்படும் என்றுடிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

PG-TRB | TET | TNPSC | chemistry Study Material (New)

சிறுபான்மையின மாணவ-மாணவியர்களுக்கு பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை வழங்குதல் 2016-17

பழைய சமச்சீர் 'சிலபஸ்' மாற்ற புதிய குழு : அரசுக்கு தனியார் பள்ளிகள் ஆலோசனை

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றபடி, புதிய பாடங்கள் இடம் பெறும் வகையில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தை மாற்றி அமைக்க வேண்டும்' என, தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டுதோறும்...:

'நீட்' தேர்வில் 'கேட்' ஏறி குதிக்க முயன்ற மாணவர்கள் : மூக்குத்தி, காது வளையத்தை பாதுகாத்த பெற்றோர்.

எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான, இரண்டாம் கட்ட, 'நீட்' மருத்துவ பொது நுழைவுதேர்வில், தாமதமாக வந்தோர் அனுமதிக்கப்படவில்லை; அதனால்பலர், 'கேட்' ஏறி குறிக்க முற்பட்டனர். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இரண்டாம் கட்ட, 'நீட்' தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது; 4.7 லட்சம் பேர் பங்கேற்றனர்.

TNPSC:உதவி ஜெயிலருக்கான தேர்வு : 18 ஆயிரம் பேர் பங்கேற்பு

தமிழக சிறைகளில், 104 உதவி ஜெயிலர் பதவிக்கான தேர்வில், 18 ஆயிரம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள மத்திய சிறைகள், மாவட்ட சிறைகளில், உதவி ஜெயிலர் பதவியில், 104 காலியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய மான, டி.என்.பி.எஸ்.சி., தேர்வை அறிவித்தது.

SSA:இரண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் தர மேம்பாட்டு பயிற்சி அளிக்க உத்தரவு

அனைத்து அரசு, அரசு உதவிபெறும், நலத்துறை பள்ளிகளில் படிக்கும், இரண்டு முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, கற்றல் தர மேம்பாட்டு பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் உத்தரவுதொடக்க, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்தும் நோக்கில், தரமேம்பாட்டு ஆய்வு மற்றும் பயிற்சி அளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில்உத்தரவிடப்பட்டுள்ளது.

கல்வி அலுவலர் தேர்வு முடிவு; காத்திருக்கும் ஆசிரியர்கள்.

தமிழக பள்ளி கல்வி துறையில் காலியாக உள்ள மாவட்ட கல்வி அலுவலர் பதவிக்கு, தேர்வு எழுதி, ஓராண்டாக, 3,000 ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர். தமிழகத்தின் பல மாவட்டங்களில், 11 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக உள்ளன.

இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க புதிய நிபந்தனை: ஆசிரியர்கள் அதிருப்தி.

இடமாறுதல் கலந்தாய்வில் அரசு கொண்டு வந்துள்ள புதிய நிபந்தனையால் பெரும்பாலான ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை உருவாகியுள்ளது.தமிழக பள்ளிக் கல்வித்துறை ஆண்டுதோறும்மே மாதம் ஒளிவுமறைவின்றி இடமாறுதல் கலந்தாய்வு நடத்தி பள்ளிகள் திறக்கும்போது, காலிப் பணியிடங்களை நிரப்புவது வழக்கம்.

தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 50% வழங்கவேண்டும்: முதுநிலை ஆசிரியர்கள் சங்கம்

பதவி உயர்வு பெற்ற முதுநிலை ஆசிரியர்களுக்கு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் 50 சதம் வழங்க உத்தரவிட கோரி நீதிமன்றத்தை அணுகுவது என ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது.தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கல்வியால் மனிதத்தைப் பரப்ப வேண்டும்: ஆளுநர் கே.ரோசய்யா

கல்வியால் மனிதத்தைப் பரப்ப வேண்டும் என ஆளுநர் கே.ரோசய்யா வலியுறுத்தினார்.ஸ்ரீ வல்லபாசார்யா வித்யா சபாவின் 50-ஆவது ஆண்டு விழா சென்னைப் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டுவிழா அரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.இதில், ஆளுநர் கே.ரோசய்யா பேசியதாவது:-

உடற்கல்வியில் 500 காலிப் பணியிடங்கள்

தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 500-க்கும் அதிகமான உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. புதிதாகத் தொடங்கப்பட்ட, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் உடற்கல்வி ஆசிரியர்களை நியமிக்காததால் மாநில, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் மாணவர்கள் பிரகாசிக்க முடியாத நிலை உருவாகியுள்ளது.

நகரங்களில் இணைய சேவை; முதலிடத்தில் தமிழகம்.

நகர் பகுதிகளில் இணையச் சேவையை அதிகமானோர்பயன்படுத்தும் மாநிலங்களில், 2.1 கோடி பேருடன், தமிழகம் முதலிடத்தில் உள்ளது.இணைய சேவை குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களின்படி, நாடு முழுவதும், நகர் பகுதிகளில், 23.1 கோடி பேரும், கிராமப் பகுதிகளில், 11.2 கோடி பேரும் இணைய சேவையை பெறுகின்றனர்.

"கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்களுக்கு விருப்ப மாறுதலை செயல்படுத்த வேண்டும்.

கல்வித் துறையில் மூன்றாண்டுகளுக்கு மேலாக ஒரே இடத்தில் பணிபுரியும் அமைச்சுப்பணியாளர்கள் உள்ளிட்டோரை விருப்ப மாறுதல் முறையில் இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என, தமிழ்நாடு கல்வித் துறை அரசு அலுவலர்கள் சங்க மாநிலச் செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஐ.டி.ஐ. மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கு ஜூலை 28 இல் கலந்தாய்வு.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் பல்வேறு பிரிவுகளில் 189 காலியிடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான கலந்தாய்வு ஜூலை 28 இல் நடைபெற உள்ளது.விருதுநகர் மாவட்டத்தில் அருப்புக்கோட்டை,சாத்தூர் மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் அரசினர் தொழிற் பயிற்சி நிலையங்கள் உள்ளன.

மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த ஆயிரம் பள்ளிகளுக்கு செல்லும் விவேகானந்தர் ரதயாத்திரை சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது.

மாணவர்களிடம் நற்குணங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவிவேகானந்தர் ரதயாத்திரை சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டது. வருகிற 4–ந்தேதி வரை ஆயிரம் பள்ளிகளுக்கு இந்த ரதங்கள் செல்கின்றன.

அனைத்து மானியங்களுக்கும் 'ஆதார்'

அனைத்து நேரடி மானிய திட்டங்களையும் இந்த ஆண்டு இறுதிக்குள்ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது. நாடு முழுவதும் 60 சதவீதத்திற்கும் மேற்பட்டோருக்கு ஆதார்எண் வழங்கப்பட்டுள்ளதால் அனைத்து நேரடி மானிய திட்டங்களையும் ஆதாருடன் இந்த ஆண்டு இறுதிக்குள் இணைக்க மத்திய அரசு தீவிரமாக உள்ளது.

பி.ஆர்க்., கல்லூரிகள் பட்டியல் வெளியிடாததால் மாணவர்கள் குழப்பம்

பி.ஆர்க்., படிப்புக்கான கவுன்சிலிங் நாளை மறுநாள் நடக்க உள்ள நிலையில், அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகள் பட்டியல்மற்றும் இடங்களின் எண்ணிக்கையை அண்ணா பல்கலை வெளியிடாததால், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். ஆர்கிடெக்ட் என்ற, கட்டட வடிவமைப்பு தொடர்பான பி.ஆர்க்., படிப்புக்கு, அண்ணா பல்கலை மூலம், 40க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் இணைப்பு அந்தஸ்து பெற்றுள்ளன.

யோகா, வர்மம் படிப்புக்கு விண்ணப்பம் வரவேற்பு

விளையாட்டு தொடர்பான பட்டம் மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கு, தொலைநிலை கல்வியில் மாணவர் சேர்க்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டு பல்கலை சார்பில், தொலைநிலை கல்வியில், பல்வேறு பட்டப்படிப்புகள், முதுநிலை பட்டப்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1.06 லட்சம் இடங்களை நிரப்புவதற்கான, துணை கவுன்சிலிங் வரும், 28ல் நடக்கிறது.

தமிழக இன்ஜினியரிங் கல்லுாரிகளில் காலியாக உள்ள, 1.06 லட்சம் இடங்களை நிரப்புவதற்கான, துணை கவுன்சிலிங் வரும், 28ல் நடக்கிறது. இதற்கு, 27ல் விண்ணப்பிக்க வேண்டும்.தமிழக இன்ஜி., கல்லுாரிகளில் மாணவர்கள் சேருவதற்கான, பொது கவுன்சிலிங், 21ல் முடிந்தது.

Jul 24, 2016

ஆசிரியர்கள் இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு துவங்கியது...பேரம்! எட்டு மாவட்டங்களில் தரகர்கள் முகாமிட்டு 'வசூல்!'

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களது விருப்பத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டு கவுன்சிலிங் தேதியை, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். தேதி அறிவித்த உடனேயே, அதிக கிராக்கி உள்ள எட்டு மாவட்டங்களில் இடைத்தரகர்கள் முகாமிட்டு, 'வசூல்' வேட்டையில் இறங்கி விட்டனர்.